தாராவி பகுதிக்குள் நுழைந்த கொரோனா கிருமி

தாராவி பகுதிக்குள் நுழைந்த கொரோனா கிருமி

1 mins read
48070679-efa1-44c1-b503-38011311399f
ஆசியாவின் மிகப்பெரிய  குடிசைப் பகுதியான மும்பை தாராவியிலும் கொரோனா கிருமித் தொற்று ஊடுருவி உள்ளது.  படம்: ஊடகம் -

மும்பை: ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியிலும் கொரோனா கிருமித் தொற்று ஊடுருவி உள்ளது.

அங்கு இதுவரை 13 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் ஒருவர் உயிரிழந்ததாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

600 ஏக்கர் பரப்பளவு மட்டுமே கொண்டுள்ள இந்தக் குடிசைப் பகுதியில் சுமார் 15 லட்சம் பேர் வசிக்கின்றனர். இவர்களில் கணிசமான எண்ணிக்கையில் தமிழர்களும் உள்ளனர்.

இந்தக் குடிசைப் பகுதியில் கொரோனா கிருமி தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் பெரிய அளவில் உயிரிழப்புகள் ஏற்படும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இது தாராவியில் வசிக்கும் ஏழை மக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. அங்கு நோய்த்தொற்று பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.