ஊரடங்கை நீட்டிக்க கட்சிகள் ஆதரவு; 11ஆம் தேதி அரசு முடிவு செய்யும்

ஊரடங்கை நீட்டிக்க கட்சிகள் ஆதரவு; 11ஆம் தேதி அரசு முடிவு செய்யும்

2 mins read
e06c9d6b-4e3d-4b65-954f-476094ed8272
இந்தியாவின் அமிர்தசரஸ் நகரின் புறநகர்ப்பகுதியில் கொவிட்-19 ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போலிசார் உணவு வழங்குகின்றனர். படம்: ஏஎப்பி -

புதுடெல்லி: கொரோனா கிருமித் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு மாநில அரசுகள் போதிய ஒத்துழைப்பை வழங்கி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

காணொளி வசதி மூலம் நாடாளுமன்றத்தில் குறைந்தபட்சம் 5 எம்பிக்கள் கொண்ட கட்சிகளின் தலைவர்களுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார்.

இதையடுத்து வெளியிடப்பட்ட அறிக்கையில், ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க பல்வேறு அரசியல் கட்சிகளும் அதரவு தெரிவித்திருப்பதாக மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிரான போரில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு செயல்பட முன்வந்தது ஆக்கப்பூர்வமான அரசியலை வெளிப்படுத்துவதாக பிரதமர் மோடி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சமூ­கத்­தில் அவ­சர நிலை அமல்­ப­டுத்­தப்­பட்­டது போன்ற சூழலை கொரோனா கிரு­மித் தொற்று ஏற்­ப­டுத்தி உள்­ளது என்­றும் இதை­ய­டுத்து மத்­திய அரசு கடி­ன­மான முடி­வு­களை எடுக்­க­வேண்டி உள்­ளது என்­றும் மோடி கூறி­யுள்­ளார்.

கொரோனா நோய்த் தொற்று பர­வும் வேகத்தை குறைத்­துள்ள நாடு­களில் ஒன்­றாக இந்­தி­யா­வும் உரு­வெ­டுத்­துள்­ளது என்று குறிப்­பிட்­டுள்ள அவர், நாட்­டில் உள்ள ஒவ்­வொ­ரு­வ­ரின் உயி­ரை­யும் காப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­க­ளுக்கு மத்­திய அரசு முன்­னு­ரிமை அளித்து வரு­வ­தா­கத் தெரி­வித்­துள்­ளார்.

கொரோனா நோய்த் தொற்று கார­ண­மாக இந்­தி­யப் பொரு­ளா­தா­ரம் பெறும் சவாலை எதிர்­கொண்­டுள்­ளது என்று கவலை தெரி­வித்­துள்ள பிர­த­மர், இந்­தச் சவா­லில் வெற்றி பெற­வேண்­டும் என்­ப­தில் மத்­திய அரசு உறு­தி­யு­டன் உள்­ளது என்று கூறி­யுள்­ளார்.

பல்­வேறு பரிந்­து­ரை­களை வழங்­கி­ய­தற்­காக எதிர்க்­கட்­சி­க­ளுக்கு நன்றி தெரி­வித்­துள்­ளார் பிர­த­மர் மோடி. மேலும் அனை­வ­ரும் இவ்­வாறு ஒன்­று­பட்டு செயல்­ப­டு­வது கூட்­டாட்சித் தத்­து­வத்தை வலுப்­ப­டுத்­தும் என்­றும் கூறி­யுள்­ளார்.

இதற்­கி­டையே ஊர­டங்கு உத்­த­ரவை நீட்­டிப்­பது குறித்து ஏப்­ரல் 11ஆம் தேதி மாநில முதல்­வர்­க­ளு­டன் ஆலோ­சனை நடத்த உள்­ளார் பிர­த­மர் மோடி. அதன்­பின்­னர் மத்­திய அர­சின் அதி­கா­ரபூர்வ அறி­விப்பு வெளி­யா­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இதற்­கி­டையே தம்­மைத் தொடர்புப­டுத்தி சமூக வலைத்­த­ளங்­களில் சிலர் மேற்­கொண்டு வரும் பிர­சா­ரத்தை தாம் விரும்­ப­வில்லை என பிர­த­மர் தெளி­வு­ப­டுத்தி உள்­ளார். பிர­த­மரின் பணி­யைக் கௌரவிக்­கும் வகை­யில் நாட்டு மக்­கள் அனை­வ­ரும் 5 நிமி­டங்­கள் எழுந்து நிற்­க­வேண்­டும் என்று சமூக வலைத்­த­ளங்­களில் ஒரு தக­வல் பரவியது. இந்­நி­லை­யில் இந்த பிர­சா­ரத்­தைப் பார்க்­கும்­போது தொடக்க நிலை­யில் தம்மை தக­ரா­றில் சிக்க வைக்க சிலர் மேற்­கொள்­ளும் சதித்­திட்­ட­மாக எண்­ணத் தோன்­று­கிறது என மோடி கூறி­யுள்­ளார்.

"என்­ மீ­தான அபி­மா­னத்­தில்­கூட சிலர் இப்­படி செய்­தி­ருக்­க­லாம். உண்­மை­யி­லேயே என்­மீது அன்பு இருப்­ப­வர்­கள் எனக்கு மரி­யாதை செய்­ய­வேண்­டும் என்­றால் ஏதே­னும் ஓர் ஏழைக் குடும்­பத்­தைக் கவ­னித்­துக் கொள்­ளுங்­கள். இதை­விட எனக்­குப் பெரிய மரி­யாதை இருக்க முடி­யாது," என்று பிர­த­மர் மோடி தெரி­வித்­துள்­ளார்.