மகாராஷ்டிர அரசு: தப்லிக் மாநாட்டில் பங்கேற்ற 1,826 பேர் கண்டுபிடிக்கப்பட்டனர்

மகாராஷ்டிர அரசு: தப்லிக் மாநாட்டில் பங்கேற்ற 1,826 பேர் கண்டுபிடிக்கப்பட்டனர்

1 mins read
2e1601d6-b54e-4fe4-af3a-67b32491d5be
மும்பையில் உள்ள தேசிய விளையாட்டு மன்றத்தின் கட்டட வளாகத்தை தனிமைப்படுத்தப்படும் மையமாக மாற்றும் பணிகளில் மும்பை மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். படம்: ஏஎப்பி -

மும்பை: மார்ச் மாதம் டெல்­லி­யில் நடை­பெற்ற தப்­லிக் ஜமாத் மாநாட்­டில் பங்­கேற்ற 1,826 பேர் அடை­யா­ளம் காணப்­பட்­டுள்­ள­தாக மகா­ராஷ்­டிரா அரசு தெரி­வித்­துள்­ளது.

கடந்த மார்ச் மாதம் 15ஆம் தேதி டெல்­லி­யில் நடை­பெற்ற மாநாட்­டில் சவூதி அரே­பியா, இந்­தோ­னீ­சியா, மலே­சியா, தாய்­லாந்து உள்­ளிட்ட பல்­வேறு நாடு­க­ளைச் சேர்ந்த இஸ்­லா­மி­யர்­கள் பங்­கேற்­ற­னர். தமி­ழ­கம் உட்­பட இந்­தி­யா­வின் பல்­வேறு மாநி­லங்­க­ளைச் சேர்ந்­த­வர்­களும் கலந்து கொண்­ட­னர்.

சுமார் 25 ஆயி­ரம் பேர் இதற்­காக டெல்லி வந்­தி­ருக்­க­லாம் எனக் கணக்­கி­டப்­பட்­டுள்­ளது. வெளி­நாடு­களில் இருந்து வந்­த­வர்­க­ளால் கொரோனா கிரு­மித் தொற்று பர­வி­யி­ருக்­க­லாம் என்­றும் கரு­தப்­ப­டு­கிறது. மேலும் மாநாட்­டில் பங்­கேற்­ற­வர்­க­ளால் நாடு முழு­வ­தும் 17 மாநி­லங்­களில் கிரு­மித் தொற்று பர­வி­யுள்­ள­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

இந்­நி­லை­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய மகா­ராஷ்­டிர மாநில உள்­துறை அமைச்­சர் அனில் தேஷ்­முக், அம்­மா­நி­லத்­தைச் சேர்ந்த ஏரா­ள­மா­னோர் தப்­லிக் மாநாட்­டில் பங்­கேற்­றது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது என்­றும் அவர்­களில் 1,885 பேர் அடை­யா­ளம் காணப்­பட்­டுள்­ள­னர் என்­றும் தெரி­வித்­தார். மேலும் இவர்­களில் 1,826 பேர் கைபேசி சேவை வழங்­கும் நிறு­வ­னங்­கள் மூலம் கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தாக குறிப்­பிட்­டார்.

"மீதமுள்ள 59 பேர் கைபேசியை அணைத்து வைத்துள்ளனர். அவர்களைத் தீவிரமாகத் தேடி வருகிறோம். அவர்கள் அனைவரும் தாமாக முன்வந்து வெளியே வரவேண்டும். இல்லையெனில் சட்டப்பூர்வ நடவடிக்கை பாயும்.

டெல்லி தப்லிக் மாநாட்டில் பங்கேற்ற 23 பேருக்கு கொரோனா கிருமித் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார் அனில் தேஷ்முக்.