'கொவிட் 19' நோயிலிருந்து மீண்டவர் கூறும் அறிவுரை

2 mins read
26d7998f-20e5-47ac-8896-739bb825f33c
மன உறு­தி­யோடு போரா­டி­னால் கொரோனா கிரு­மித் தொற்று பாதிப்­பி­லி­ருந்து நிச்­ச­யம் குண­ம­டைய முடி­யும் என்று பாஜக எம்பி சித்­தேஷ்­வ­ரின் மகள் அஷ்­வினி தெரி­வித்­துள்­ளார்.  படம்: ஊடகம் -

பெங்­க­ளூரு: மன உறு­தி­யோடு போரா­டி­னால் கொரோனா கிரு­மித் தொற்று பாதிப்­பி­லி­ருந்து நிச்­ச­யம் குண­ம­டைய முடி­யும் என்று பாஜக எம்பி சித்­தேஷ்­வ­ரின் மகள் அஷ்­வினி தெரி­வித்­துள்­ளார்.

இது தொடர்­பாக வெளி­யிட்ட காணொ­ளிப் பதிவு ஒன்­றில், கிரு­மித் தொற்­றி­லி­ருந்து தாம் முழு­மை­யா­கக் குண­ம­டைந்­தது குறித்து அவர் விவ­ரித்­துள்­ளார்.

கர்­நா­ட­கா­வைச் சேர்ந்த பாஜக எம்­பி­யான சித்­தேஷ்­வ­ரின் மகள் அஷ்­வினி தமது கண­வ­ரு­டன் கயானா நாட்­டில் வசித்து வரு­கி­றார்.

மார்ச் மாத இறு­தி­யில் தன் மக­ளு­டன் இந்­தியா திரும்­பிய அஷ்­வி­னிக்கு நடத்­தப்­பட்ட மருத்­து­வப் பரி­சோ­த­னை­யில் அவ­ருக்கு கொரோனா கிரு­மித் தொற்று இருப்­பது தெரி­ய­வந்­தது. இதை­ய­டுத்து தனி­மைப்­ப­டுத்­தப்­பட்ட அவ­ருக்­குத் தீவிர சிகிச்சை அளிக்­கப்­பட்­டது.

"கொரோனா கிரு­மித் தொற்­றி­லி­ருந்து விடு­ப­டவே முடி­யாது என அஞ்­ச­வேண்­டாம்.

"மருத்­து­வர்­கள் என்­னைத் தனி­மை­யில் இருக்­கு­மாறு சொன்ன­போது வேடிக்­கை­யா­கத்­தான் இருந்­தது.

"ஆனால் அது சவா­லான காலம். தனி­மை­யில் இருந்­த­போது மருத்­து­வர்­க­ளின் அறி­வு­ரையை ஏற்­று செயல்­பட்­ட­தால் குண­ம­டைந்­துள்­ளேன்.

"தனி­மை­யில் இருந்­த­போது நேரத்தை வீண­டிக்­கா­மல் யோகா பயிற்­சி­யில் ஈடு­பட்­டேன். நம்­பிக்­கை­யு­ட­னும் வலி­மை­யு­ட­னும் இருந்­தேன்," என அஷ்­வினி தெரி­வித்­துள்­ளார்.

தற்போது முழுமையாகக் குணமடைந்து குடும்பத்தாருடன் பத்திரமாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்புகிறவர்கள் தாமாக முன்வந்து மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது மிக அவசியம் எனக் கூறியுள்ளார்.

தனிமையில் இருந்தபோது குடும்பத்தார் உறவினர்கள், நண்பர்கள் எனப் பலரும் தன்னைக் கைபேசி வழி தொடர்பு கொண்டு பேசியதாகவும் அப்போது தமக்கு ஆறுதல் கூறி, நகைச்சுவையாகப் பலவற்றைப் பேசி நம்பிக்கை ஊட்டியதாகவும் அஷ்வினி அந்தக் காணொளிப் பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் இந்தக் காணொளியைப் பலரும் பரவலாகப் பகிர்ந்து வருகின்றனர்.