மகாராஷ்டிரா: 1,364 பேருக்கு கொரோனா கிருமித் தொற்று

மகாராஷ்டிரா: 1,364 பேருக்கு கொரோனா கிருமித் தொற்று

2 mins read
5ba0b4a3-66dd-4b30-99c4-6c3f27eea57c
ஊரடங்குக்கு மத்தியில் அமிர்தசரஸ் நகரில் கூடிய காய்கறிச் சந்தை. படம்: ஏஎஃப்பி -

மும்பை: மகா­ராஷ்­டி­ரா­வில் கொரோனா கிரு­மித் தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை 1,364 ஆக அதி­க­ரித்­துள்­ளது. நேற்று முன்­தி­னம் ஒரே நாளில் புதி­தாக 229 பேருக்­குக் கிரு­மித்­தொற்று இருப்­பது உறுதி செய்­யப்­பட்­டது.

இந்­நி­லை­யில் ஆசி­யா­வின் மிகப்­பெ­ரிய குடி­சைப் பகு­தி­யான தாரா­வி­யில் தமிழ்ப் பெண் ஒரு­வர் கொரோனா கிருமி பாதிப்­பால் உயிரி­ழந்­துள்­ளார்.

கொரோனா கிரு­மித் தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்ள மாநி­லங்­க­ளின் பட்­டி­ய­லில் மகா­ராஷ்­டிரா முத­லி­டம் வகிக்­கிறது. மும்­பை­யில் மட்­டுமே சுமார் 800 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதை­ய­டுத்து மும்பை மாந­க­ரில் 381 பகு­தி­கள் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. குடி­சைப்­ப­கு­தி­யான தாரா­வி­யி­லும் கொரோனா கிரு­மித் தொற்று நுழைந்­துள்­ளது. அங்கு மூவர் பலி­யா­கி­யுள்­ள­னர். இந்­நி­லை­யில் தாரா­வி­யில் உள்ள அனை­வ­ருக்­கும் கொரோனா கிரு­மித் தொற்­றுக்­கான பரி­சோ­த­னையை நடத்த முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

அங்­குள்ள 7.5 லட்­சம் குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்கு அடுத்து வரும் 15 நாட்­களில் இந்­தப் பரி­சோ­த­னையை நடத்த மும்பை மாந­க­ராட்சி திட்­ட­மிட்­டுள்­ள­தா­கத் தக­வல் வெளி­யா­கி­யுள்­ளது. ஏற்­கெ­னவே தாரா­வி­யில் குறிப்­பிட்ட சில இடங்­கள் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

இந்நிலையில் மகாராஷ்டிராவில் நேற்று முன்தினம் ஒரேநாளில் 'கொவிட் 19' நோயிலிருந்து 22 பேர் முழுமையாகக் குணமடைந்துள்ளனர் என்ற தகவல் அம்மாநில மக்களுக்கு ஆறுதல் அளித்துள்ளது.

மகா­ராஷ்­டி­ரா­வில் கொவிட் 19 நோயால் இது­வரை 97 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­னர்.

இந்­நி­லை­யில் நாடு முழு­வ­தும் கொரோனா கிரு­மித் தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை 7 ஆயி­ரத்­தைக் கடந்­துள்­ளது. உயி­ரி­ழந்­தோர் எண்ணிக்­கை­யும் 200ஐ கடந்­துள்ள நிலை­யில் நேற்று காலை 9 மணி நில­வ­ரப்­படி மகா­ராஷ்­டி­ரா­வுக்கு அடுத்­த­ப­டி­யாக குஜ­ராத்­தில் 17 பேர் கொரோனா கிரு­மித் தொற்றால் பலி­யா­கி­யுள்­ள­னர்.

மத்­தி­யப் பிர­தே­சத்­தில் 16 பேர், டெல்­லி­யில் 12 பேர், பஞ்சாப், தமி­ழ­கத்­தில் தலா 8 பேர், தெலுங்­கா­னா­வில் 7 பேர், மேற்கு வங்­கத்­தில் 5 பேர், ஆந்­திரா, உத்திரப்­பி­ர­தே­சம், ஜம்மு காஷ்­மீ­ரில் தலா 4 பேர், ராஜஸ்­தான், ஹரி­யா­னா­வில் தலா 3 பேர், கேர­ளா­வில் 2 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக மத்­திய சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது. பீகார், ஒடிசா, இமாச்­ச­லப்­பி­ர­தே­சம், ஜார்க்­கண்ட் ஆகிய 4 மாநி­லங்­களில் தலா ஒரு­வர் மட்டுமே உயி­ரி­ழந்­துள்­ள­னர்.