இந்தியாவுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி உதவி

இந்தியாவுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி உதவி

1 mins read
c8a58d64-9dbf-4c09-ba7c-c780e6bf94a9
கொரோனா கிரு­மித் தொற்று பர­வ­லைத் தடுப்­ப­தி­லும் மக்­க­ளுக்கு நிவா­ர­ணம் வழங்­கு­வ­தி­லும் இந்­திய அரசு உறு­தி­யான நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டுள்­ள­தாக ஆசிய வளர்ச்சி வங்கி பாராட்டு தெரி­வித்­துள்­ளது. கொரோனா கிரு­மித் தொற்று பர­வல் தடுப்பு பணிக்­காக இந்­தி­யா­வுக்கு ரூ.16,500 கோடி நிதி ஒதுக்­கப்­படும் என்­றும் அந்த வங்கி கூறி­யுள்­ளது.  படம்: ஊடகம் -

புது­டெல்லி: கொரோனா கிரு­மித் தொற்று பர­வ­லைத் தடுப்­ப­தி­லும் மக்­க­ளுக்கு நிவா­ர­ணம் வழங்­கு­வ­தி­லும் இந்­திய அரசு உறு­தி­யான நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டுள்­ள­தாக ஆசிய வளர்ச்சி வங்கி பாராட்டு தெரி­வித்­துள்­ளது.

கொரோனா கிரு­மித் தொற்று பர­வல் தடுப்பு பணிக்­காக இந்­தி­யா­வுக்கு ரூ.16,500 கோடி நிதி ஒதுக்­கப்­படும் என்­றும் அந்த வங்கி கூறி­யுள்­ளது.

இது தொடர்­பாக மத்­திய நிதி அமைச்­சர் நிர்­மலா சீதா­ரா­ம­னு­டன் ஆசிய வளர்ச்சி வங்­கி­யின் தலை­வர் மசாட்­சுகு அச­காவா தொடர்பு கொண்டு பேசி­னார்.

அப்­போது இந்­தி­யா­வின் அவ­ச­ரத் தேவை­க­ளுக்கு ஆத­ர­வ­ளிக்க ஆசிய வளர்ச்சி வங்கி உறுதி பூண்­டுள்­ள­தாக அவர் குறிப்­பிட்­டார்.

"இப்­போது சுகா­தா­ரத் துறைக்கு உட­னடி உத­வி­யாக 2.2 பில்­லி­யன் டாலர்­களை அனுப்ப உள்­ளோம். தொற்­று­நோ­யி­னால் ஏழை­கள், முறை­சாரா தொழி­லா­ளர்­கள், சிறு குறு மற்­றும் நடுத்­தர நிறு­வ­னங்­கள், மற்­றும் நிதித் துறை மீதான பொரு­ளா­தார தாக்­கத்தை தணிக்க உத­வு­கி­றோம்," என்று அச­காவா தெரி­வித்­துள்­ளார்.

தேவைப்­பட்­டால் இந்­தி­யா­வுக்­கான உத­வித்­தொகை மேலும் அதி­க­ரிக்­கப்­படும் என்­றும் அவர் கூறி­னார்.

இந்­தி­யா­வின் தேவை­க­ளைப் பூர்த்தி செய்­வ­தற்கு அவ­சர உதவி, கொள்கை அடிப்­ப­டை­யி­லான கடன்­கள் மற்­றும் ஆசிய வளர்ச்சி வங்கி நிதி­களை விரை­வாக விநி­யோ­கிக்க அனைத்து நிதி வழி­மு­றை­க­ளை­யும் அந்த வங்கி பரி­சீலிக்­கும் என்று அச­காவா மேலும் தெரி­வித்­துள்­ளார்.