மும்பை தாராவி குடிசைப்பகுதியில் நான்காவது மரணம்

மும்பை: இந்­தி­யா­வின் மகா­ராஷ்­டிரா மாநி­லத்­தில் கொரோனா கிரு­மித்­தொற்று அதிக பாதிப்பை ஏற்ப­டுத்தி உள்­ளது.

உல­கின் மிகப் பெரிய குடி­சைப் பகு­தி­யான மும்பை தாரா­வி­யி­லும் கொரோனா கிரு­மித்­தொற்று அதி­க­ரித்து வரு­கிறது. தாரா­வி­யில் இது­வரை 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

அங்கு ஏற்­கெ­னவே கொரோ­னா­வால் மூவர் உயி­ரி­ழந்த நிலை­யில், நேற்று மேலும் ஒரு­வர் இறந்­துள்­ளார். கஸ்­தூர்பா மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்று வந்த 80 வயது முதி­ய­வர் இறந்­த­தை­ய­டுத்து, தாரா­வி­யில் மரண எண்­ணிக்கை நான்­காக அதி­க­ரித்­துள்­ளது. தாரா­வி­யில் கொரோனா கிரு­மிப் பர­வல் மோச­ம­டைந்­தி­ருப்­ப­தால் சமூக பர­வ­லைத் தடுக்க அங்­குள்ள 7.5 லட்­சம் மக்­க­ளுக்­கும் கொரோனா பரி­சோ­தனை நடத்­தும் பணி­கள் முழு­வீச்­சில் நடை­பெற்று வரு­கின்­றன என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

மகா­ராஷ்­டிரா மாநி­லத்­தில் மேலும் 92 பேருக்கு கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டி­ருப்­ப­தாக நேற்று உறு­தி­செய்­யப்­பட்­டது.

இதன்­மூ­லம் கிரு­மித்­தொற்­றால் பாதிப்பு அடைந்­தோ­ரின் எண்­ணிக்கை 1,666 ஆக அதி­க­ரித்­துள்­ளது என அம்­மா­நில சுகா­தா­ரத்­துறை தெரி­வித்­துள்­ளது.

இதன் விளை­வாக மகா­ராஷ்­டிரா மாநி­லத்­தில் இம்­மா­தம் 30ஆம் தேதி வரை ஊர­டங்கு நீட்­டிக்­கப்­பட்­டுள்­ளது என அம்­மா­நில முதல்­வர் உத்­தவ் தாக்­கரே நேற்று அறி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!