பெங்களூரு: கொரோனா கிருமித்தொற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடிநிலையிலும் பொதுமக்கள் தங்களை சுற்றியுள்ள தெருக்களில் சுற்றித்திரியும் நாய், பூனை மற்றும் பறவைகளிடம் கருணை காட்ட வேண்டும் என்றும் அவற்றுக்கு உணவும் தண்ணீரும் கொடுக்க வேண்டும் என்றும் கர்நாடக முதல்வர் எடியூரப்பா வேண்டுகோள் விடுத்துள்ளார். குறிப்பாக நகர்ப்பகுதிகளில் தான் அதிகமான பிராணிகளே உணவும் நீரும் இன்றி வாடுகின்றன என்று முதல்வர் எடியூரப்பா கூறினார்.
பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் உணவு கொடுங்கள்: எடியூரப்பா
1 mins read
தெருவில் சுற்றித்திரிந்த பூனை ஒன்றுக்கு உணவளித்து அந்தப்பூனை சாப்பிடுவதைப் பார்த்து மகிழும் முதல்வர் எடியூரப்பா. படம்: டுவிட்டர், எடியூரப்பா -

