வேலையிழந்த நிலையில் துபாய், அபுதாபியில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள்; தாயகம் திரும்ப நீதிமன்றத்தில் முறையீடு

ஐக்கிய அரபு நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர விமானங்களை அனுமதிக்குமாறு துபாய் நலவாழ்வுக் குழு ஒன்று உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளாது.

இம்மாதம் 14ஆம் தேதி வரை இந்தியாவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் அனைத்துலக வர்த்தக விமானங்கள் வருவதற்கு இந்தியா அனுமதியை நிறுத்தியுள்ளது.

கேரளாவைச் சேர்ந்த சுமார் 10,000 பேர் தாயகம் திரும்ப விரும்ப்வதாக ஐக்கிய அரபு எமிரேட்சின் தி நேஷனல் பத்திரிகையிடம் அவர்களைப் பிரதிநிதிக்கும் ஹாரிஸ் பீரன் எனும் வழக்கறிஞர் தெரிவித்தார்.

அங்கு பல ஊழியர்கள் வேலையிழந்திருப்பதாகவும் சுற்றுலாவுக்காக அங்கு சென்ற பயணிகளின் விசா காலம் முடிவடைந்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த வியாழக்கிழமை கேரளா முஸ்லிம் கலாசார நிலையத்தால் அந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. நேற்று (ஏப்ரல் 11) அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஐக்கிய அரபு நாடுகளில் சிக்கித் தவிப்போரை அழைத்து வருவதன் தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து இம்மாதம்17ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்குமாறு நீதிமன்றம் மத்திய அரசிடம் கேட்டுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசாங்கம் அங்கு தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானத்தை  ஏற்பாடு செய்ய முன்வந்துள்ள நிலையில், இந்திய அரசாங்கம் அதன் தொடர்பிலான அனுமதியை வழங்க வேண்டும் என வழக்கறிஞர் வாதிட்டார்.

அங்கிருந்து திரும்புவோர் 28 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவது உள்ளிட்ட நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டியது இருந்தாலும் அவர்களைத் தாயகத்துக்கு அழைத்து வரவேண்டியது அவசியம் என்றார் அவர்.

“அங்கு வசிப்பதற்கான பொருளாதாரம் உள்ளிட்ட வசதிகள் இல்லாமல் தவிக்கும் அவர்கள் தாயகம் திரும்ப விரும்புகின்றனர்,” என்றார அவர்.

ஐக்கிய அரபு நாடுகளில் வசிக்குக்கும் இந்தியர்களின் வயதான பெற்றோர் பலருக்குத் தேவையான மருந்துகள் கிடைக்காத நிலையில் அவர்கள் ஊருக்குத் திரும்ப வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டீருந்தது.

ஜெர்மன், பிரிட்டன், கனடா நாடுகளைச் சேர்ந்தவர்களை இந்த ஊரடங்கு காலத்தில் சொந்த நாடுகளுக்கு அனுப்ப ஏர் இந்தியா விமானம் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டதை மேற்கோள் காட்டி, மத்திய அரசு, பொது விமானப் போக்குவரத்து அமைச்சு ஆகியவற்றிடம் கோரிக்கை வைத்துள்ளது அந்த அமைப்பு.

“பல இந்தியர்களிடம் பணமில்லாத நிலையில் உணவுப்பொருள் தட்டுப்பாடு,” ஏற்பட்டிருப்பதாகக் குறிப்பிட்ட அந்த மனு, “அத்தகையோரின் சிரமங்களைக் குறைப்பதற்காக அவர்களைச் சொந்த நாட்டுக்கு அழைத்து வரவேண்டும்,” என்பதை இந்திய அரசியலமைப்புச் சட்டம் 21ஐ மேற்கோள் காட்டியது அந்த மனு.

தொண்டூழியர்கள், பேராளர்கள், உள்ளூர் மற்றும் மத்திய அதிகாரிகள் ஆகியோருடன் இணைந்து இந்திய நன்கொடைக் குழுக்கள் ஐக்கிய அரபு நாடுகள் முழுவதும் நன்கொடைத் திரட்டு மேற்கொண்டு, வேலையிழந்தோரின் குடும்பத்தாருக்கு உதவி வருகின்றன. கொரோனா கிருமிப் பரவலைத்ட் ஹடுப்பதற்காக பல கடைகள், கடைத்தொகுதிகள் மூடப்பட்டதையடுத்து பல இந்திய ஊழியர்கள் அங்கு வேலையிழந்தது குறிப்பிடத்தக்கது.

துபாய், அபுதாபி விமான நிலையங்களில் குறைந்தபட்சம் 20 இந்திய சுற்றுப் பயணிகள் தவித்து வருகின்றனர். கொரோனா கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இந்தியா கடந்த மாதம்22ஆம் தேதியிலிருந்து வெளிநாட்டு விமானங்களுக்கு தடை விதித்துள்ளாது குறிப்பிடத்தக்கது.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon