பிரதமரின் முடிவை அமல்படுத்த தமிழக அரசு முடிவு; ரூ.1,000 கோடி நிதி கோரிக்கை

ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக பிரதமர் மோடி அறிவிக்கும் முடிவை அமல்படுத்துவது என தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இத்தகவலைத் தலைமைச் செயலர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா கிருமி தொற்றியோர் எண்ணிக்கை 969ஆக அதிகரித்துள்ளதாகவும் இதுவரை 11 பேர் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

கொரோனா கிருமித் தொற்று பாதிப்பு தொடர்பாக தமிழக மாவட்டங்கள் மூன்று வண்ணங்களின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், சிவப்பு, மஞ்சள், ஆரஞ்ச் ஆகிய மூன்று வண்ணங்களைக் கொண்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா கிருமித் தொற்று பாதிப்பின் நிலை குறித்து அறியமுடியும் என்றார்.

இந்நிலையில், தமிழகத்தில் தலைமைச் செயலர் தலைமையில் ஒரு பணிக்குழுவும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளைக் கொண்ட 12 குழுக்களும் கொரோனா கிருமி பரவல் தடுப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நேற்று (ஏப்ரல் 11) கொரோனா கிருமி பரவல் தடுப்பு நடவடிக்கை மற்றும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுடன் காணொளி வசதி மூலம் கலந்தாலோசித்தார்.

இதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் பழனிசாமி தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு மிக தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். கொரோனா கிருமி பரவல் தடுப்பு உபகரணங்கள் வாங்க தமிழகத்திற்கு 1000 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

“தற்போது ரயில் மற்றும் விமானப் போக்குவரத்துச் சேவைகள் தொடங்கப்படக்கூடாது. மாநிலங்களுக்கு இடையேயான பயணிகள் போக்குவரத்தையும் அனுமதிக்கக்கூடாது என்பதைப் பிரதமருக்கும் மற்ற மாநில முதல்வர்களுக்கும் வேண்டுகோளாக வைக்கிறேன்.

“பருப்பு, மசாலா வகைகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை பிற மாநிலங்களிலிருந்து ரயில்கள் மூலம் எளிதாகக் கொண்டுவர வழிவகை செய்யவேண்டும். அதேபோல் மாநிலங்களுக்கு இடையே லாரிகள் மூலம் இதுபோன்ற சரக்குப் போக்குவரத்தை அனுமதிக்க வேண்டும்,” என்றார் முதல்வர் பழனிசாமி.

இந்த நீண்டகால ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் காலகட்டத்தில் மக்களுக்கு உணவுப்பொருட்கள் கிடைக்காமல் நெருக்கடி ஏற்பட அனுமதிக்கக்கூடாது என்று குறிப்பிட்ட அவர், வேளாண்மைக்கு முழு ஆதரவு அளிக்கப்பட வேண்டும் என்றார்.

வேளாண்மை மற்றும் தோட்டக்கலை மேம்பாட்டுக்காக பிரதமர் சிறப்புத் தொகுப்பு ஒன்றை அளிக்கவேண்டும் என்றும் ஊரடங்கு உத்தரவு நீடித்தால் அமைப்பு சாரா தொழிலாளர்கள், வேளாண் தொழிலாளர்களை ஆதரிக்கும் வகையில் கூடுதல் நிதி மற்றும் அத்தியாவசியப் பொருட்களை அனுமதிக்க வேண்டும் என்றும் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தினார்.

தமிழகத்தில் கொரோனா கிருமிப் பரவல் தடுப்பு நடவடிக்கைள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அனைத்துப் பொது இடங்களும் தூய்மைப்படுத்தப்படுவதாகக் கூறினார்.

இதுவரை 32,371 தனிப் படுக்கைகளும், 5,934 அவசர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தயாராக வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

“தொற்று தொடர்பான பரிசோதனைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்காக என்ற துரித பரிசோதனை உபகரணங்கள் தேவைப்படுகின்றன. தமிழகத்துக்கு 2 லட்சம் உபகரணங்களை அளிக்க வேண்டும்.

“21 அரசு மருத்துவமனைகளும், 155 தனியார் மருத்துவமனைகளும் கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

தற்போது தமிழகத்தில் 12 அரசு சோதனைக் கூடங்களும், 7 தனியார் சோதனைக் கூடங்களும் உள்ளன. மாவட்டத்துக்கு ஒன்று என்ற அளவில் இதன் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்,” என முதல்வர் பழனிசாமி வலியுறுத்தினார்.

அதிக அளவில் பிசிஆர், மற்றும் துரித பரிசோதனை உபகரணங்களை தமிழகத்துக்கு மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், போதுமான அளவில் செயற்கை சுவாசக் கருவிகள் தரப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!