‘இந்தியாவில் 40 ஆண்டு காணாத அளவுக்கு பொருளியல் சரியும்’

கொரோனா கிருமித்தொற்று பாதிப்புகள் காரணமாக இந்தியாவும் இதர தெற்காசிய நாடுகளும் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு மிகக் குறைவான பொருளியல் வளர்ச்சியைக் காணும் என்று உலக வங்கி முன்னுரைத்துள்ளது.

தென்கிழக்கு ஆசிய வட்டாரத்தில் எட்டு நாடுகள் உள்ளன. அந்த நாடுகளின் பொருளியல் வளர்ச்சி இந்த ஆண்டு 1.8 விழுக்காடு முதல் 2.8 விழுக்காடு வரைதான் இருக்கும் என்று உலக வங்கி தெரிவித்து இருக்கிறது.

இந்த வளர்ச்சி 6.3 விழுக்காடு அளவுக்கு இருக்கும் என்று ஆறு மாதத்திற்கு முன் பொருளியல் வங்கி கணித்து இருந்தது.

ஆனால் அந்த வங்கி இப்போது வெளியிட்டு இருக்கும் தெற்கு ஆசியப் பொருளியல் நிலவர அறிக்கை வேறு மாதிரியாகத் தெரிவிக்கிறது.

தெற்கு ஆசியாவிலேயே ஆகப் பெரிய பொருளியல் நாடான இந்தியாவின் வளர்ச்சி ஏப்ரல் 1 முதல் தொடங்கும் இந்த நிதி ஆண்டில் 1.5 விழுக்காடு முதல் 2.8 விழுக்காடு வரைதான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மார்ச் 31ல் முடிவடைந்த நிதி ஆண்டில் இந்தியப் பொருளியல் 4.8 விழுக்காட்டில் இருந்து 5.8 விழுக்காடு வரை வளரும் என்று ஏற்கெனவே மதிப்பிட்டுள்ளது.

ஆனால் இப்போது கொரோனா கிருமிகள் எல்லாவற்றையும் கெடுத்துவிட்டதாக வங்கி குறிப்பிட்டது. இந்தியாவுடன் இலங்கை, நேபாளம், பூடான், பங்ளாதேஷ் ஆகிய நாடுகளிலும் பொருளியல் வளர்ச்சி மோசமாக இருக்கும் என்று வங்கி தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், மாலத்தீவு ஆகிய இதர மூன்று நாடுகளில் வளர்ச்சி இன்றி பொருளியல் மந்தத்தில் சிக்கிவிடும் என்று அறிக்கையில் குறிப்பிட்டு உலக வங்கி எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!