இந்தியா: 40 ஆண்டு காணாத அளவுக்கு பொருளியல் சரியும்

இந்தியா: 40 ஆண்டு காணாத அளவுக்கு பொருளியல் சரியும்

2 mins read
be5fb8ef-b190-465b-bd00-c6fe33dfa24e
கொவிட்-19 ஊரடங்கால் கொல்கத்தாவில் சிற்பக் கலைஞர் ஒருவர் தான் வேலை பார்க்கும் பட்டறைக்கு அருகே சாலையில் அமர்ந்து சாப்பிடுகிறார். படம்: ஏஎப்பி -

புது­டெல்லி: கொரோனா கிரு­மித்­தொற்று பாதிப்­பு­கள் கார­ண­மாக இந்­தி­யா­வும் இதர தெற்­கா­சிய நாடு­களும் 40 ஆண்­டு­களில் இல்­லாத அள­வுக்கு இந்த ஆண்டு மிகக் குறை­வான பொரு­ளி­யல் வளர்ச்­சி­யைக் காணும் என்று உலக வங்கி முன்­னு­ரைத்துள்ளது.

தென்­கி­ழக்கு ஆசிய வட்­டா­ரத்­தில் எட்டு நாடு­கள் உள்­ளன. அந்த நாடு­க­ளின் பொரு­ளி­யல் வளர்ச்சி இந்த ஆண்டு 1.8 விழுக்­காடு முதல் 2.8 விழுக்­காடு வரைதான் இருக்­கும் என்று உலக வங்கி தெரி­வித்து இருக்­கிறது.

இந்த வளர்ச்சி 6.3 விழுக்­காடு அள­வுக்கு இருக்­கும் என்று ஆறு மாதத்­திற்கு முன் பொரு­ளி­யல் வங்கி கணித்து இருந்­தது.

ஆனால் அந்த வங்கி இப்­போது வெளி­யிட்டு இருக்­கும் தெற்கு ஆசி­யப் பொரு­ளி­யல் நில­வர அறிக்கை வேறு மாதி­ரி­யா­கத் தெரி­விக்­கிறது.

தெற்கு ஆசி­யா­வி­லேயே ஆகப் பெரிய பொரு­ளி­யல் நாடான இந்தி­யா­வின் வளர்ச்சி ஏப்­ரல் 1 முதல் தொடங்­கும் இந்த நிதி ஆண்­டில் 1.5 விழுக்­காடு முதல் 2.8 விழுக்­காடு வரை­தான் இருக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

மார்ச் 31ல் முடி­வ­டைந்த நிதி ஆண்­டில் இந்­தி­யப் பொரு­ளி­யல் 4.8 விழுக்­காட்­டில் இருந்து 5.8 விழுக்­காடு வரை வள­ரும் என்று ஏற்­கெ­னவே மதிப்­பிட்டுள்ளது.

ஆனால் இப்­போது கொரோனா கிரு­மி­கள் எல்­லா­வற்­றை­யும் கெடுத்­து­விட்­ட­தாக வங்கி குறிப்­பிட்­டது. இந்­தி­யா­வு­டன் இலங்கை, நேபா­ளம், பூடான், பங்­ளா­தேஷ் ஆகிய நாடு­க­ளி­லும் பொரு­ளி­யல் வளர்ச்சி மோச­மாக இருக்­கும் என்று வங்கி தெரி­வித்துள்­ளது.

பாகிஸ்­தான், ஆப்­கா­னிஸ்­தான், மாலத்­தீவு ஆகிய இதர மூன்று நாடு­களில் வளர்ச்சி இன்றி பொரு­ளி­யல் மந்­தத்­தில் சிக்­கி­விடும் என்று அறிக்­கை­யில் குறிப்­பிட்டு உலக வங்கி எச்சரிக்கை விடுத்து இருக்­கிறது.