மூன்று பகுதிகளாக ஊரடங்கு

மூன்று பகுதிகளாக ஊரடங்கு

2 mins read
a5576e63-c6f2-4573-8fab-e80fe23f379f
கொரோனா தடுப்பு, ஊர­டங்கு விலக்கு, பொரு­ளா­தா­ரச் சீர­மைப்பு ஆகி­யவை குறித்து வியா­ழ­னன்று உயர் அதி­கா­ரி­க­ளு­டன் பிர­த­மர் மோடி ஆலோ­சனை நடத்­தி­னார்.  அப்­போது உயிர்­க­ளைக் காப்­ப­தி­லும் வாழ்­வா­தா­ரத்­தைக் காப்­ப­தி­லும் சம­மான கவ­னம் செலுத்த வேண்­டும் எனத் தெரி­வித்­துள்­ளார். படம்: ஏஎஃப்பி -

புது­டெல்லி: கொரோனா தடுப்பு, ஊர­டங்கு விலக்கு, பொரு­ளா­தா­ரச் சீர­மைப்பு ஆகி­யவை குறித்து வியா­ழ­னன்று உயர் அதி­கா­ரி­க­ளு­டன் பிர­த­மர் மோடி ஆலோ­சனை நடத்­தி­னார்.

அப்­போது உயிர்­க­ளைக் காப்­ப­தி­லும் வாழ்­வா­தா­ரத்­தைக் காப்­ப­தி­லும் சம­மான கவ­னம் செலுத்த வேண்­டும் எனத் தெரி­வித்­துள்­ளார்.

மக்­க­ளின் உயி­ரும் காப்­பாற்­றப்­பட வேண்­டும். அதே சம­யத்­தில் பொரு­ளா­தா­ரத்தை மீட்­டெ­டுக்க வேண்­டி­ய­தும் முக்­கி­யம் என பிர­த­ம­ரி­டம் அதி­கா­ரி­கள் கூறி­யுள்­ள­னர். அதன்­படி சில யோச­னை­க­ளை­யும் அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­தாகக் கூறு­கி­றார்­கள்.

பொரு­ளா­தார நட­வ­டிக்­கை­களும் புத்­து­யிர் பெற வேண்­டும் என்று அவர்­கள் விரும்­பு­கி­றார்­கள், ஏனெ­னில் துறை­மு­கங்­கள் கொள்

­க­லன்­க­ளால் நிரம்பி வழி­கின்­றன, மேலும் மும்பை மற்­றும் சென்னை போன்ற முக்­கிய துறை­முக நக­ரங்­கள் தொற்­று­நோ­யால் பாதிக்­கப்­பட்­டுள்­ளன.

அதன்­படி பொரு­ளா­தா­ரத்தை மீட்­டெ­டுக்க வேண்­டி­ய­தன் பொருட்டு இந்­தி­யாவை மூன்று மண்­ட­லங்­க­ளா­கப் பிரிக்க வேண்­டும். சிவப்பு மண்­ட­லம், ஆரஞ்சு மண்­ட­லம், பச்சை மண்­ட­லங்­களா­கப் பிரிக்க யோசனை தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சிவப்பு மண்­ட­லத்­தில் எந்­த­வொரு நட­வ­டிக்­கை­யும் அனு­ம­திக்­கப்­ப­டாது. கணி­ச­மான எண்­ணிக்­கை­யி­லான பாதிப்­பு­கள் கண்­ட­றி­யப்­பட்ட மாவட்­டங்­கள் அல்­லது கிரு­மிக் குழு­மங்­கள் அறி­விக்­கப்­பட்ட பகு­தி­கள் அடங்­கும்.

ஆரஞ்சு மண்­ட­லம்: குறைந்த பொதுப் போக்­கு­வ­ரத்­தை அனுமதித் ­தல், பண்­ணைப் பொருட்­களை அறு­வடை செய்­வது போன்ற குறைந்­த­பட்ச நட­வ­டிக்­கை­கள் ஆரஞ்சு மண்­ட­லங்­களில் அனு­ம­திக்­கப்­படும்.

பச்சை மண்­ட­லம்: இங்கு ஊர­டங்கு மேலும் தளர்­வைக் காணும். பசுமை மண்­ட­லத்­தின்கீழ் வரும் சில எம்எஸ்எம்இ தொழில்­கள் சமூக இடைவளியை சரி­யாகப் பரா­ம­ரிக்­கும் ஊழி­யர்­க­ளுக்­கான உள்­தங்­கு­மிட வச­தி­க­ளு­டன் செயல்­பட அனு­ம­திக்­கப்­படும் என்று இந்­திய அர­சாங்­கச் செய்தி நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது.