திருவனந்தபுரம்: உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா கொரோனா பாதிப்பால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆராட்டுபுழா கோயிலில் நடைபெறும் பூரம் விழாவில் திருச்சூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள யானைகளின் அணிவகுப்பு நடைபெறும். செண்டமேளம், கலை நிகழ்ச்சிகள் என களைகட்டும்.
இந்த விழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வது வழக்கம்.
இந்நிலையில், மே 3ஆம் தேதி நடைபெறவிருந்த பூரம் திருவிழா கொரோனா கிருமி பாதிப்பால் ரத்து செய்யப்பட்டுள்ளது. மக்கள் கூட்டமாகக் கூடுவதைத் தவிர்க்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதற்குமுன்பு 1962ஆம் ஆண்டு இந்தியா- சீனா இடையே ஏற்பட்ட போரின் போது பூரம் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதன் பின்னர் கிட்டத்தட்ட 58 ஆண்டுகளில் முதன்முறையாக தற்போது பூரம் திருவிழா கொண்டாட்டம் தடைபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

