ஒரே நாளில் 909 பேருக்கு கிருமி பாதிப்பு

ஒரே நாளில் 909 பேருக்கு கிருமி பாதிப்பு

1 mins read
6e1e83ff-f3d8-4124-895a-b9d13ef50f8a
புதுடெல்லியில் மருத்துவமனை வாயிலில் உடல் வெப்பநிலையைச் சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் அதிகாரி ஒருவர். படம்: இபிஏ, ராஜாட் குப்தா -

புதுடெல்லி: மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்தி யில், "இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி 8,356 ஆக அதிகரித்துள்ளது. பாதிப்பி லிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 716ஆக உயர்ந்து உள்ளது. அதேபோல், கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 273ஆக உயர்ந்து உள்ளது. 24 மணி நேரத்தில் 909 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 34 பேர் உயிரிழந்து விட்டனர்," என்று கூறப்பட்டது.