தெருவைக் கூட்டிய அமைச்சர்

தெருவைக் கூட்டிய அமைச்சர்

1 mins read
636a8580-92aa-4484-871a-f5334b5b1efe
கர்­நா­ட­கா­வின்  தொடக்க மற்­றும் இடை­நி­லைக் கல்வி அமைச்­சர் எஸ்.சுரேஷ்­கு­மா­ரும் அவ­ரது மனை­வி­யும் தங்­க­ளின் வீட்­டைச் சுற்றி உள்ள தெருக்­களை சுத்­தம்­செய்து உள்­ள­னர்.  படம்: Twitter/@BBMPCOMM -

பெங்­க­ளூரு: கர்­நா­ட­கா­வின் தொடக்க மற்­றும் இடை­நி­லைக் கல்வி அமைச்­சர் எஸ்.சுரேஷ்­கு­மா­ரும் அவ­ரது மனை­வி­யும் தங்­க­ளின் வீட்­டைச் சுற்றி உள்ள தெருக்­களை சுத்­தம்­செய்து உள்­ள­னர்.

அது தொடர்­பான காணொளி படங்­களை பெங்­க­ளூரு மகா­ந­கர் பாலிகே (பிபி­எம்பி) ஆணை­யர் பி.எச்.அனில்­கு­மார் சமூக ஊட­கங்­களில் பகிர்ந்­துள்­ளார்.

"உங்­கள் சுற்­றுப்­பு­றத்தை சுத்­த­மாக வைத்­தி­ருப்­ப­தற்­கும் உழைப்­பின் கௌர­வத்தை நிலை­நி­றுத்­து­வ­தற்­கும் இது நல்லதொரு செயல். தங்­க­ளின் இந்தச் செயலுக்காக மரி­யா­தைக்­கு­ரிய அமைச்­ச­ரான உங்­க­ளுக்­கும் உங்­கள் மனை­விக்­கும் நன்றி," என்று ஆணை­யா­ளர் தமது சமூக ஊடகப் பதிவில் குறிப்­பிட்டு உள்­ளார்.

அமைச்­சர் மற்­றும் அவ­ரது மனை­வி­யின் சமூகச் செய­லுக்கு பாராட்­டு­கள் குவிந்து வரு­கின்­றன.