கொரோனா கிருமித்தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக உத்தரகாண்டின் ரிஷிகேஷ் நகரில் கங்கை ஆற்றின் கரையோரப் பகுதிகளிலும் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் வெளிநாட்டினர் 10 பேர் அதை மீறிவிட்டனர்.
அவர்கள் 10 பேரையும் விசாரித்த போலிஸ், 'ஊரடங்கு விதிகளை நான் பின்பற்றவில்லை. அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்' என 500 முறை எழுதித் தரவேண்டும் என்று தண்டனை விதித்தனர்.
இந்தத் தண்டனையை அனுபவித்து எழுதித் தந்துவிட்டு வெளிநாட்டினர் தனித்தனியாகச் சென்றனர்.
படம்: இந்திய ஊடகம்

