ஊர் திரும்ப 1,700 கிலோ மீட்டர் தூர மிதிவண்டிப் பயணம்

புவ­னேஸ்­வர்: ஊர­டங்கு உத்­த­ரவு அமல்­ப­டுத்தப்­பட்­ட­தால் சொந்த ஊருக்கு உட­ன­டி­யா­கத் திரும்ப முடி­யாத ஒரு­வர் 1700 கி.மீ. தூரத்தை சைக்­கி­ளில் பய­ணம் செய்து கடந்­துள்­ளார்.

ஒடி­சா­வைச் சேர்ந்த 20 வய­தான மகேஷ் ஜினா என்ற இளை­யர் மகா­ராஷ்­டி­ரா­வில் உள்ள தொழிற்­சாலை­யில் வேலை பார்த்து வரு­கி­றார். இந்­நி­லை­யில் ஊர­டங்கு அறி­விக்­கப்­பட்­ட­தால் அவர் வேலை பார்த்த தொழிற்­சாலை மூடப்­பட்­டது.

மேலும், பொதுப்­போக்­கு­வ­ரத்­தும் முடங்­கிய நிலை­யில் சொந்த ஊருக்­குச் செல்ல இய­லா­மல் தவித்­தார் மகேஷ். ஒரு வாரம் நிலை­மை­யைச் சமா­ளித்த நிலை­யில் அவர் வேலை பார்க்­கும் தொழிற்­சாலை அடுத்த 3 மாதங்­க­ளுக்கு திறக்­கப்­பட வாய்ப்­பில்லை என அவ­ருக்­குத் தக­வல் கிடைத்­தது.

இத­னால் கையில் உள்ள 3 ஆயி­ரம் ரூபாய் ரொக்­கப் பணத்­தைக் கொண்டு எது­வும் செய்ய இய­லாது என அவர் பயந்­தார். 15 ஆயி­ரம் ரூபாய் ஊதி­யம் பெறும் அவ­ருக்கு உண­வுக்­காக மட்­டும் மாதந்­தோ­றும் 6 ஆயி­ரம் ரூபாய் செல­வா­கிறது.

இதை­ய­டுத்து தொழிற்­சா­லைக்­குச் செல்­வ­தற்­காக வாங்கி வைத்­தி­ருந்த பழைய மிதி­வண்­டி­யில் சொந்த ஊருக்­குப் புறப்­பட்­டார் மகேஷ்.

கடந்த 1ஆம் தேதி முதல் மகாராஷ்டிரா, ஆந்திரா, சத்தீஷ்கர் ஆகிய 3 மாநிலங்களையும் கடந்து சொந்த மாநிலமான ஒடிசா சென்று சேர்ந்துள்ளார். இதற்காக அவர் மொத்தம் 1,700 கி.மீ. தூரத்தைக் கடக்க வேண்டி இருந்தது.

“தினமும் 14 மணி நேரம் மிதிவண்டி ஓட்டினேன். குளிர், வெயில் பாராமல் கிடைத்த உணவை வாங்கிப் பசியாறி சற்று நேரம் மட்டும் ஓய்வெடுத்து பயணத்தைத் தொடர்ந்தேன்.

“வழியில் உள்ள குளங்களில் குளித்தேன். ஒருவழியாக கடந்த 7ஆம் தேதி சொந்த கிராமத்தைச் சென்றடைந்தேன்,” என்று மகேஷ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கிராம எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்ட அவர், அங்குள்ள பள்ளிக் கட்டடத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!