மும்பை: மும்பை பாந்த்ரா ரயில் நிலையத்துக்கு அருகே உள்ள சாலையில் திரண்டு நின்று ஆயிரக் கணக்கான வெளிமாநிலத் தொழிலாளா்கள் போராட்டம் நடத்தினர்.
கொரோனா கிருமித் தொற்று பரவிவிடுமோ என்ற எந்த ஒரு பயமும் இல்லாமல், முகக்கவசம், சமூக இடைவெளி பற்றி கவலைப் படாமல் உரக்க முழக்கமிட்டனர்.
"எங்களுக்கு வயிராற உணவு போடவேண்டாம், எங்களை சொந்த ஊருக்கு போகச் சொன்னால் அதுவே போதும்," என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனா்.
தேசிய ஊடரங்கு மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி அறிவித்த தைத் தொடா்ந்து வெளிமாநிலத் தொழிலாளா்கள் இந்த போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
அவர்கள் எல்லாம் பீகார், உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள் எனக் கூறப்படுகிறது.
"எங்களுக்கு வேலையும் இல்லை, உணவும் இல்லை. உடனடியாக ரயிலை இயக்குங்கள், எங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்புங்கள்," எனக் கூறி போராட்டத்தில் இறங்கினர்.
கொரோனா சமூகப்பரவலா காமல் இருப்பதற்குத்தான் இந்த ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முகக் கவசங்கள், சமூக இடைவெளி எதையும் பின்பற்றாமல் மக்கள் சாலைகளில் கூடியது மகாராஷ்டிரா அரசுக்கு பெரும்சங்கடத்தை ஏற்படுத்தியது.
தொழிலாளர்கள் சிலர் கூறு கையில், "தன்னார்வலர்களும் தொண்டு நிறுவனங்களும் எங்க ளுக்கு உணவுகளை வழங்குகிறார்கள். ஊரடங்கு உத்தரவு காரணமாக எங்கள் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நாங்கள் எங்கள் சொந்த ஊர்க ளுக்குத் திரும்ப விரும்புகிறோம். எங்களுக்கு உணவு வேண்டாம். நாங்கள் எங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப வழி கூறுங்கள். ஊரடங்கு உத்தரவை நீட்டித்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி இல்லை. எங்களுடைய சேமிப்புகள் அரசு அறிவித்த 21 நாள் ஊரடங்கு நாட்களிலேயே காலியாகிவிட்டன. சாப்பிடுவதற்குக் கூட வழியில்லை. நாங்கள் எங்கள் சொந்த ஊருக்குத் திரும்ப அரசாங்கம் அதற்கான வசதியை செய்துதர வேண்டும்," என்றனர்.
இைதத்தொடர்ந்து அவா்களது தேவைகள் நிறைவேற்றப்படும் என்று அரசுத் தரப்பில் வாக்குறுதி அளித்தனர். இதையடுத்து ஒரு பகுதியினா் கலைந்து சென்றனா்.
கலைந்து செல்லாதவா்கள் மீது போலிசார் தடியடி நடத்தி விரட்டினா். இதுதொடா்பான காெணாளி சமூக வலைத்தளங்களில் பரவி யது. இந்தப் பிரச்சினை தொடா்பாக மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரேவுடன் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தொலைபேசியில் பேசினாா்.
இதேபோல், குஜராத் மாநிலம் சூரத் நகரில் நூற்றுக்கணக்கான வெளிமாநிலத் தொழிலாளா்கள் தங்களை சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பி வைக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

