நாமக்கல்: பாதுகாப்பு உபகரணங்கள் கேட்டு ராசிபுரத்தில் அமைச்சர் தங்கமணியின் காரை துப்புரவுத் தொழிலாளர்கள் வழிமறித்தனர்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகராட்சியில் பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு முகக் கவசம், கையுறை என எந்த பாதுகாப்பு வசதிகளும் அளிக்கப்படவில்லை. 2ஆம் கட்ட ஊரடங்கும் தொடங்கிய நிலையில், பாதுகாப்பு உபகரணங்கள் வந்துகொண்டே இருப்பதாக அதிகாரிகள் கூறிவருகின்றனர்.
இதனால் எரிச்சலடைந்த துப்புரவுப் பணியாளர்கள், ராசிபுரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா, மாவட்ட ஆட்சியர் மெகராஜ் உள்ளிட்டோர் வந்த காரை வழி மறித்து தங்கள் பிரச்சினையைத் தெரிவித்தனர்.காருக்குள் இருந்தபடியே விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து விட்டுச் சென்றனர்.

