புனே: உலகம் எங்கும் வேகமாகப் பரவி வரும் கொரோனா கிருமித் தொற்று வெளவால்களில் இருந்து பரவியதாக சந்தேகிக்கப்படும் நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் 10 மாநிலங்களில் உள்ள இருவகையான வௌவால் இனங்கள் குறித்து ஆய்வு நடத்தி ஆய்வறிக்கை சமர்ப்பித்துள்ளது.
இதனடிப்படையில் தமிழகம், புதுச்சேரி, கேரளா, இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காணப்படும் வௌவால் இனங்களில் எடுக்கப்பட்ட மாதிரிகளில் கொரோனா கிருமி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம், கர்நாடகா, தெலுங்கானா, குஜராத், ஒடிசா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் எடுக்கப்பட்ட வௌவால் மாதிரிகளில் கொரோனா கிருமி இல்லை எனவும் தெரியவந்துள்ளது.
இருப்பினும், இந்த வெளவால் களின் கிருமிகள் மனிதர்களுக்கு நோயை ஏற்படுத்தும் என்று கூற எந்த ஆதாரமும் ஆராய்ச்சியும் இல்லை என்றும் ஆய்வில் தெளி வாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, புனே தேசிய வைராலஜி ஆய்வு நிறுவனத்தைச் சோந்த ஆராய்ச்சியாளா் பிரக்யா டி யாதவ் கூறுகையில், "இந்த கிருமிக்கும் 'கொவிட்-19' பாதிப்புக்கு காரணமான கொரோனா கிருமிக்கும் தொடா்பில்லை.
அத்துடன் வெளவால்களில் தற்போது கண்டறியப்பட்டுள்ள 'பேட் கொரோனா வைரஸ்' மனிதா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதற்கான ஆதாரமோ அல்லது உறுதி யான ஆய்வு முடிவுகளோ இல்லை.
பொதுவாகவே வெளவால்களில் பல்வேறு விதமான கிருமிகள் உள்ளன. இவற்றில் சில கிருமிகள் மனிதனுக்கு எதிா்பாராதவிதமாக பரவி பாதிப்பை ஏற்படுத்துகின்றன. எனவே வெளவால்களிடம் தொடா் ஆராய்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்," என்றாா் அவா்.

