கொவிட்-19 கிருமியைத் துடைத்தொழிக்க ரூ. 155 கோடி நிதியளித்த தொழிலதிபர்

கொவிட்-19 கிருமியைத் துடைத்தொழிக்க ரூ. 155 கோடி நிதியளித்த தொழிலதிபர்

1 mins read
de093d19-dc92-479f-8d92-e1865df29064
கொவிட்-19ஐ எதிர்த்­துப் போராட மத்­திய, மாநில அர­சு­க­ளுக்கு ரூ.155 கோடி நிதி அளித்­துள்ள தொழி ல­தி­பர் ராதா ­கிஷன் தமா­னி. படம்: ஊடகம் -

புது­டெல்லி: கொரோனா கிரு­மியை எதிர்த்­துப் போராட மத்­திய, மாநில அர­சு­க­ளுக்கு ரூ.155 கோடி நிதி அளித்­துள்ள தொழி­ல­தி­பர் ராதா­கிஷன் தமா­னி­யைப் பாராட்­டி­யுள்ள மோடி 'ஒருங்­கி­ணைந்து கொரோ­னாவை வெல்­வோம்' என டுவிட் செய்­துள்­ளார்.

அவென்யூ பல்­பொ­ருள் அங்­காடி களின் நிறு­வ­னர் ராதா­கி­ஷன் தமானி, பிர­த­ம­ரின் நிவா­ரண நிதிக்கு ரூ.100 கோடி­யும் மாநில அர­சு­க­ளுக்கு ரூ.55 கோடி­யும் கொரோனா தடுப்பு நட­வ­டிக்­கை­கள், சிகிச்­சை­க­ளுக்­காக நிதி வழங்­கி­னார்.

இதில் மஹா­ராஷ்­டிரா, குஜ­ராத்­திற்கு ரூ.10 கோடி, ஆந்­திரா, தெலங்­கானா, கர்­நா­டகா, ராஜஸ்­தான், பஞ்­சாப் மாநி­லங்­க­ளுக்கு தலா ரூ.5 கோடி, தமி­ழ­கம், சத்­தீஸ்­கர், மத்­தி­யப் பிர­தே­சம், உத்­த­ரப்­பி­ர­தே­சம் மாநி­லங்­க­ளுக்கு தலா ரூ.2.5 கோடி நிதி வழங்­கி­யுள்­ளார்.

இது­கு­றித்து தமானி வெளி யிட்­டுள்ள அறிக்­கை­யில் 'பொது மக்­க­ளைப் பாது­காக்க மத்­திய, மாநில, உள்­ளாட்சி அமைப்புகள் மேற்­கொண்ட விரை­வான நட­வ­டிக்­கை­க­ளுக்கு நாங்­கள் முழு­மை­யாக ஆத­ர­வ­ளிக்­கி­றோம். நம் சமூகத்­தை­யும் சக மனி­தர்­க­ளை­யும் பாது­காக்க நாம் ஒவ்­வொ­ரு­வ­ரும் நம்­மால் முடிந்த அனைத்­தை­யும் செய்ய வேண்­டும்," என கூறி­னார்.

பிரைட் ஸ்டார் முத­லீடு நிறு­வ­னம் மூலம் இந்த நிதி­யு­த­வியை தமானி வழங்­கி­யுள்­ளார்.

இந்­திய பணக்­கா­ரர்­களில் தமா­னி­யின் சொத்து மதிப்பு மட்­டும் தான் கொரோனா கிருமி நெருக்­க­டி­க­ளுக்கு இடை­யி­லும் 5% உயர்வைக் கண்­டுள்­ளன. மக்­கள் அனை­வ­ரும் ஊர­டங்கு கார­ண­மாக பேரங்­கா­டி­களில் அதி­க­ள­வில் பொருட்­களை வாங்­கி­ய­தால் இந்த உயர்வை கண்­டுள்­ளார்.