தனிமைப்படுத்தப்பட்ட 69 கர்ப்பிணிகள்

தனிமைப்படுத்தப்பட்ட 69 கர்ப்பிணிகள்

1 mins read

புனே: மருத்துவர் ஒருவரை கொரோனா கிருமி தொற்றியதை அடுத்து அவரிடம் சிகிச்சை பெற்ற கர்ப்பிணிகள் 69 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலம், புனே மாவட்டத்தைச் சேர்ந்த 31 கிராமங்களைச் சேர்ந்த அந்தப் பெண்கள் அனைவரும் அவர்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அப்பெண்கள் கிருமித்தொற்று சோதனைக்கு உட்படுத்தப்படுவர். அத்துடன், அந்த கிராமங்கள் அனைத்தும் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளாக அறிவிக்கப் பட்டுள்ளன.

இதேபோல, டெல்லியில் பீட்சா விநியோகித்த பையன் ஒருவனுக்குக் கிருமித்தொற்று இருப்பது உறுதிப்படுத்தப் பட்டதால் 72 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.