மருத்துவரைத் தாக்கிய கொரோனா நோயாளி கைது

மருத்துவரைத் தாக்கிய கொரோனா நோயாளி கைது

1 mins read

ஹைதராபாத்: தெலுங்கானாவின் ஹைதராபாத் நகரில் மருத்துவர் ஒருவரைத் தாக்கியதாகக் கூறி கொரோனா நோயாளி ஒருவரை போலிஸ் கைது செய்துள்ளது.கடந்த 1ஆம் தேதி அங்குள்ள காந்தி மருத்துவமனையில் அந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது. மருத்துவரைத் தாக்கிய ஆடவர் நேற்று முன்தினம் காணொளி மூலமாக நீதிபதியின் முன்னால் நிறுத்தப் பட்டார். இதேபோல, ஒஸ்மானியா மருத்துவமனையிலும் மருத்துவரைத் தாக்கிவிட்டு தப்பிச் சென்ற இருவரை போலிசார் மடக்கிப் பிடித்தனர்.