போலிசிடம் பொய் சொல்லி தப்பித்தவர் கொரோனாவிடம் சிக்கிக்கொண்டார்

போலிசிடம் பொய் சொல்லி தப்பித்தவர் கொரோனாவிடம் சிக்கிக்கொண்டார்

1 mins read

பெங்களூரு: ஊரடங்கு அமலில் உள்ள காலத்தில் சாலையில் மோட்டார்சைக்கிளில் வந்த 26 வயது இளையரை போலிசார் மடக்கியபோது, தம் தந்தை இறந்துவிட்டதாகவும் இறுதிச் சடங்கு செய்ய போய்க்கொண்டு இருப்பதாகவும் பொய்யுரைத்து அவர் தப்பிவிட்டார்.

உயிருடன் இருக்கும் தந்தையை இறந்து விட்டதாகக் கூறிய அந்த ஆடவர் கொரோனா கிருமியிடம் சிக்கிக்கொண்டார். நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ள தந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற அந்த ஆடவர் பலமாக இருமியுள்ளார். மூச்சுவிடவும் சிரமமாக இருப்பதாக அவர் கூற, அருகிலுள்ள ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு நடத்திய சோதனையில் அவரைக் கிருமி தொற்றியது உறுதிசெய்யப்பட்டது. இதை அடுத்து, அவரும் அவருடைய தந்தையும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.