தப்லிக் ஜமாத் தலைவர் மீது வழக்குப்பதிவு

1 mins read

புதுடெல்லி: நோக்கமற்ற மரணத்தை விளைவித்ததாகக் கூறி தப்லிக் ஜமாத் தலைவர் மீதும் அவரின் கூட்டாளிகள் அறுவர் மீதும் டெல்லி போலிசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். டெல்லி நிஜாமுதீன் பகுதியில் நடந்த தப்லிக் ஜமாத் நிகழ்வில் பல மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்களில் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்; சிலர் உயிரிழந்து விட்டனர். இதனிடையே, விசா விதிகளை மீறிவிட்டதாகக் கூறி அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வெளிநாட்டவர்கள் 11 பேர் பீகாரில் கைதாகியுள்ளனர்.