கொரோனா: 13,495 பேருக்குத் தொற்று; 1,767 பேர் குணம்; 452 பேர் மரணம்

கொரோனா: 13,495 பேருக்குத் தொற்று; 1,767 பேர் குணம்; 452 பேர் மரணம்

1 mins read

புது­டெல்லி: இந்­தி­யா­வில் கொரோனா கிருமி தொற்­றி­ய­வர்­க­ளின் எண்­ணிக்கை நேற்­றைய நில­வ­ரப்­படி 13,495 ஆக உயர்ந்­தது. அவர்­களில் 60 விழுக்­காட்­டி­னர் தமி­ழ­கம் உள்­ளிட்ட ஐந்து மாநி­லங்களைச் சேர்ந்­த­வர்­கள் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

கொவிட்-19 எனப்­படும் அந்­தக் கிருமி தொற்­றுக்கு இலக்­காகி 452 பேர் பலி­யாகி­விட்­ட­னர். ஆனாலும் குண­ம­டைந்து வீடு திரும்­பு­வோ­ரின் எண்­ணிக்கை வேக­மா­கக் கூடி வரு­கிறது என்று அதி­கா­ரி­கள் தெரி­வித்து இருக்­கி­றார்­கள்.

நேற்­றைய நில­வ­ரப்­படி 1,767 பேர் குண­ம­டைந்து உள்­ள­தாக அதி­கா­ரி­கள் கூறி­னர்.

உல­கின் பல நாடு­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில் இந்­தி­யா­வில் கொரோனா கிரு­மித்­தொற்று பாதிப்பு அவ்­வ­ளவு மோச­மாக இல்லை என்­றா­லும் இன்­ன­மும் தொற்று ஏறு­மு­க­மா­கவே இருந்து வரு­கிறது.

நாட்­டில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்­ணிக்கை அதி­க­ரிக்­கும் இந்த நிலை நீடிக்­கும் பட்­சத்­தில் மே மாதம் முதல் வாரத்­தில் கொவிட்-19 தாக்­கம் உச்­சத்தை அடை­ய­லாம் என்­றும் அதன்­ பின்­னர் குறையும் என்­றும் உள்­துறை அமைச்சு வட்­டா­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.

மகா­ராஷ்­டிரா, புது­டெல்லி, தமிழ்­நாடு, ராஜஸ்­தான், மத்­தி­யப் பிர­தே­சம் ஆகி­ய­வற்­றில் பாதிப்­பு­கள் அதி­க­மாக இருக்­கிறது.

இத­னி­டையே, 53 உலக நாடு­களில் உள்ள 3,336 இந்­தி­யர்­க­ளுக்கு கொரோனா கிரு­மித்­தொற்று இருப்­ப­தா­க­வும் வெளி­நாடு­களில் பலி­யான இந்­தி­யர்­க­ளின் எண்­ணிக்கை 25 ஆக உள்­ளது என்­றும் மத்­திய அரசு வட்­டா­ரங்­கள் குறிப்­பிட்­டன.

கொவிட்-19 கார­ண­மாக வெளி­நா­டு­களில் சிக்­கி­யி­ருக்­கும் இந்­தி­யர்­களை உட­ன­டி­யா­கத் தாய­கம் கொண்டு வரு­வது சாத்­தி­ய­மா­னது அல்ல என்­றும் அதி­கா­ரி­கள் தெரி­வித்து உள்­ள­னர்.