புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீரில் தடைசெய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்புடன் சேர்ந்து இரண்டு புதிய பயங்கரவாத குழுக்களை பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு உருவாக்கியிருப்பதாக இந்திய உளவுத் துறை எச்சரித்துள்ளது.
பாதுகாப்புப் படைகள் மீது பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதே நோக்கம் என்றும் அது குறிப்பிட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே, காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நேற்று நடத்திய தாக்குதலில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டார்.

