ஊரடங்கு உத்தரவு மீறல்: தமிழகத்தில் மட்டும் ரூ.1 கோடியைத் தாண்டிய அபராத வசூல்

1 mins read
4e0e707b-4c83-4e34-8b57-5cb417a60ee6
ஊரடங்கு உத்தரவை மீறி தேவை இல்லாமல் வாகனங்களில் ஊர் சுற்றுபவர்கள் மீது போலிசார் வழக்குப்பதிவு செய்து, நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.படம்: சதீஷ் -
multi-img1 of 3

கொரோனா கிருமிப் பரவலைத் தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடப்பில் உள்ளது.

இந்த உத்தரவை மீறி தேவை இல்லாமல் வாகனங்களில் ஊர் சுற்றுபவர்கள் மீது போலிசார் வழக்குப்பதிவு செய்து, நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

அவர்கள் சென்ற வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது.

தமிழகம் முழுவதும், இதுவரை 2,28,823 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 2,14,951 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

1,94,339 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ரூ.1,06,74,294 அபராதம் வசூலிக்கப்பட்டதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் இந்த ஊரடங்கு நடப்பில் இருக்கும் நிலையில் மொத்தம் எவ்வளவு வசூலாகி இருக்கிறது என்பது பற்றிய உறுதியான தகவல் இன்னும் வெளியாகவில்லை.

குறிப்புச் சொற்கள்