விமானப் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவது குறித்து முடிவு எடுக்கப்படவில்லை: இந்திய அரசு

விமானப் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவது குறித்து முடிவு எடுக்கப்படவில்லை: இந்திய அரசு

2 mins read
6bca7868-cea0-4947-b7e6-974da61fd7c7
பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா அனைத்துலக விமான நிலையத்தில் முடங்கி உள்ள விமானங்கள். படம்: ஏஎஃப்பி -

புது­டெல்லி: முடக்­க­நி­லையை நீக்­கு­வது அல்­லது தளர்த்­து­வது குறித்த இறுதி முடிவு அறி­விக்­கப்­படும் வரை விமா­னப் பய­ணத்திற் கான முன்பதி­வு­களை மேற்­கொள்ள வேண்­டாம் என இந்­திய விமான நிறு­வ­னங்­கள் கேட்­டுக்­கொள்­ளப்­பட்டு உள்­ளன.

கொரோனா கிரு­மிப் பர­வல் இன்­னும் கட்­டுக்­குள் வரா­த­தால் மே 3ஆம் தேதிக்­குப் பிறகு இந்­திய அரசு என்ன மாதி­ரி­யான முடி­வு­கள் எடுக்­கும் என்று யாருக்­கும் தெரி­ய­வில்லை.

எனி­னும், பாதிப்பு குறை­வாக உள்ள இடங்­களில் இன்று 20 ஆம் தேதிக்­குப் பிறகு சில தொழில் நிறு­வ­னங்­கள், சேவை­க­ளைத் தொடங்க உள்­துறை அமைச்சு அனு­மதி வழங்­கி­யி­ருக்­கிறது.

மே 3ஆம் தேதியுடன் இந்த ஊர­டங்கு உத்­த­ரவு முடி­வ­டைய உள்ள நிலை­யில் அடுத்­தக்­கட்ட நட­வ­டிக்­கை­கள் எப்­படி இருக்­கக்­கூ­டும் என்று தொடர்ந்து கேள்வி எழுந்து வரும் நிலை­யில் தற்­போது ஏர் இந்­தியா நிறு­வ­னம் தனது விமா­னச் சேவையை மீண்­டும் தொடங்­கு­வ­தற்­கான அறி­விப்பை வெளி­யிட்­டுள்­ளது.

இது­தொ­டர்­பாக அந்­நி­று­வ­னம் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில்; இந்­தி­யா­வில் மே 4ஆம் தேதி முதல் உள்­நாட்டு விமா­னச் சேவை தொடங்­கும். பய­ணி­கள் குறிப்­பிட்ட சில உள்­நாட்டு விமா­னங்­களில் டிக்­கெட் முன்­ப­திவு செய்­ய­லாம். அதே­போல், ஜூன் 1ஆம் தேதி முதல் அனைத்­து­லக விமா­னங்­களில் டிக்­கெட்­டு­களை முன்­ப­திவு செய்­ய­லாம் என்று தெரி­விக்­கப்­பட்டு இருந்­தது.

ஆனால் விமா­னப் பயண முன்­ப­தி­வு­களை தொடங்க வேண்­டாம் என விமா­னப் போக்­கு­வ­ரத்து அமைச்­சர் ஹர்­தீப் பூரி சனிக்­கி­ழமை இரவு அறிக்கை ஒன்­றில் தெரி­வித்­தார். "உள்­நாட்டு, அனைத்­து­லக விமா­னப் பய­ணங்­களை மீண்­டும் தொடங்­கு­வது குறித்து விமா­னப் போக்­கு­வ­ரத்து அமைச்சு இது­வரை எந்­த­வொரு முடி­வை­யும் எடுக்­க­வில்லை," என அந்த அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்டு உள்­ளது.