முக்கியமான தொழில்களுக்கு மத்திய அரசு அனுமதி

முக்கியமான தொழில்களுக்கு மத்திய அரசு அனுமதி

1 mins read

புது­டெல்லி: இந்­தி­யா­வில் கொவிட்-19 கிரு­மித் தொற்று சில மாநி­லங்­களில் அதி­க­ரித்து வரு­கிறது. நாடு முழு­வ­தும் இந்­தக் கொடுந்­தொற்று நோய் பாதித்­த­வர்­க­ளின் எண்­ணிக்கை 16,000 நெருங்கி வரும் நிலை­யில், பலி எண்­ணிக்­கை­யும் 500ஐ தாண்­டி­யுள்­ளது. நோய்த்­தொற்­றைக் கட்­டுப்­ப­டுத்த ஏற்­கெ­னவே நாடு முழு­வ­தும் பிறப்­பிக்­கப்­பட்­டி­ருந்த ஊர­டங்கு மே 3ஆம் தேதி வரை நீட்­டிக்­கப்­பட்­டுள்­ளது.

கொரோனா தொற்­றால் பாதிக்­காத இடங்­களில் 20ஆம் தேதி முதல் நிபந்­த­னை­யு­டன் சில தளர்­வு­கள் அளிக்­கப்­படும் என பிரதமர் மோடி தெரி­வித்திருந்தார். இந்த நிலை­யில் இன்று முதல் செயல்­பாட்­டிற்கு வரும் சேவை­கள், தொழில்­க­ளின் பட்­டி­யலை மத்­திய அரசு வெளி­யிட்­டுள்­ளது.

இதனை மத்­திய அமைச்­சர் ரவி­சங்­கர் பிர­சாத் டுவிட்­ட­ரில் பதிவிட்டுள்ளார். அதன் விவ­ரம் பின்­வ­ரு­மாறு:-

மருத்­துவ சேவை­கள், வேளாண் மற்­றும் தோட்­டத் தொழில்­கள், மீன்­பி­டித் தொழில், தேயிலை, காப்பி, ரப்­பர் தோட்­டத் தொழில்­கள் அதி­க­பட்­சம் விழுக்­காட்டு ஊழி­யர்­க­ளு­டன் செயல்­ப­ட­லாம்.

நிதித்­துறை மற்­றும் சமூக நலத்­துறை, தேசிய ஊரக வேலை­வாய்ப்புத் திட்­டம் தொட­ரும். இதில் ஊழி­யர்­கள் முகக் கவ­சம் அணிந்து சமூக இடை­வெ­ளியை கடைப்­பிடிக்க வேண்­டும்.

பொது விநி­யோ­கத்­துறை, மாநி­லங்­கள், மாவட்­டங்­க­ளுக்கு இடை­யே­யான சரக்­குப் போக்­கு­வ­ரத்து, இணை­யம் வழி கற்­பித்­தல் மற்­றும் தொலை­தூ­ரக் கல்வி, அத்­தி­யா­வ­சியப் பொருட்­கள் விநி­யோ­கம், தனி­யார் நிறு­வ­னங்­கள், கட்­டு­மா­னத் தொழில்­கள், அவ­சர மருத்­து­வத் தேவைக்­காக வாக­னங்­கள் இயக்­கு­வது, அரசு அலு­வ­ல­கங்­கள் செயல்­படும். இந்த அறி­விப்­பு­கள் கொரோனா பாதிப்பு தீவி­ர­மாக உள்ள பகு­தி­க­ளுக்கு பொருந்­தாது என அமைச்­சர் தெரி­வித்­துள்­ளார்.