புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை பதினாறாயிரத்தைத் தாண்டியுள்ளது. இதில் 29.8 விழுக்காட்டினர் டெல்லி நகரின் நிஜாமுதீனில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டுடன் தொடர்புடையவர்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரில் 84% போ் அந்த மாநாட்டுடன் தொடர்புடையவர்கள் என அந்த அமைச்சு கூறியுள்ளது.
கொவிட்-19 பாதிப்பு: 29.8% பேர் தப்லீக் மாநாட்டுக்குச் சென்றவர்கள்
1 mins read

