மோடி: இந்தியா புதிய பணி கலாசாரத்துக்கும் தலைமை தாங்க முடியும்

1 mins read
68ada1b4-0129-4c9a-9823-d846f265de70
-

கொரோனா கிருமி தாக்கத்தால் தொழில்முறை வாழ்க்கையே மாறிவிட்டதாகவும், வீடே அலுவலகம் , இணையதளமே சந்திப்பு அறை என்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

இது தொடர்பாக தமது சமூக வலைத்தளப் பக்க பதிவு ஒன்றில், நடப்பு மாற்றங்களுக்கு ஏற்ப தம்மை மாற்றிக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

"எனது அமைச்சரவை சகாக்களானாலும் சரி, அதிகாரிகளானாலும் சரி, உலக தலைவர்களானாலும் சரி, எல்லாரிடமும் காணளொனி காட்சி மூலம்தான் சந்திப்பை நடத்துகிறேன். இதன்மூலம், சிக்கலான தருணங்களில் கூட நமது அலுவலகங்கள், வர்த்தகம் ஆகியவை வேகமாக இயங்க முடியும் என்பது தெளிவாகிறது.

"இன்று உலகமே வர்த்தக முன்னுதாரணத்தை தேடி ஓடி கொண்டிருக்கிறது. கண்டுபிடிப்புகளுக்கு பெயர் போன இளம் இந்தியா, புதிய பணி கலாசாரத்துக்கும் தலைமை தாங்க முடியும்," என்று அந்தப் பதிவில் பிரதமர் மோடி மேலும் தெரிவித்துள்ளார்.