ஜெய்ப்பூர்: கொரோனா கிருமித்தொற்றை விரைவாகப் பரிசோதனை செய்யக்கூடிய 'ரேபிட் டெஸ்ட் கிட்' ராஜஸ்தானில் தவறான முடிவுகளைத் தந்ததால் அந்தக் கருவி மூலம் செய்யப்பட்டு வந்த பரிசோதனை நிறுத்தப்பட்டு உள்ளது. இது குறித்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ரகு சர்மா கூறுகையில் பரிசோதனை முடிவுகள் 90% துல்லியமாக இருக்க வேண்டும், ஆனால் அது 5.4% மட்டுமே இருந்தது," என்றார்.
இந்தப் பரிசோதனைக் கருவி அண்மையில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

