கொரோனாவை முறியடித்த கோவா

கொரோனாவை முறியடித்த கோவா

1 mins read
89966555-fe3e-411c-9dbc-aebb02b8f7b3
நாட்­டின் முக்­கிய சுற்­று­லாத் தலங்­களில் ஒன்­றான கோவா­வில் கொரோனா பாதிப்பு முழு­மை­யாக கட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. படம்: ஏஎப்பி -

பனாஜி: நாட்­டின் முக்­கிய சுற்­று­லாத் தலங்­களில் ஒன்­றான கோவா­வில் கொரோனா பாதிப்பு முழு­மை­யாக கட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இங்கு இம்­மா­தம் 3ஆம் தேதி­யி­லி­ருந்து புதி­தாக யாருக்­கும் பாதிப்பு ஏற்­ப­ட­வில்லை. இங்கு மொத்­தம் ஏழு பேர் கொரோ­னா­வால் பாதிக்­கப்­பட்டு இருந்­த­னர். அவர்­கள் அனை­வ­ரும் முழு­மை­யா­கக் குண­ம­டைந்து வீடு திரும்பி­ விட்­ட­னர். இதை­ய­டுத்து கொ ரோனா கிருமி இல்­லாத மாநி­லம் என்ற பெரு­மையை கோவா பெற்று உள்­ளது.

இது­கு­றித்து மாநில முதல்­வர் பிர­மோத் சாவந்த் தனது டுவிட்­டர் பதி­வில், "கோவா முழு­வ­து­மாக கொரோனா பாதிப்­பி­லி­ருந்து வெளியே வந்­து­விட்­டது. இதற்­காக தங்­கள் உயி­ரை­யும் பொருட்­ப­டுத்­தா­மல் கடு­மை­யாக உழைத்த மருத்­து­வர்­கள், தாதி­யர், களப்­ப­ணி­யா­ளர்­கள் ஆகி­யோரை உள்­ள­டக்­கிய அனைத்து சுகா­தா­ரத்­துறை பணி­யா­ளர்­க­ளுக்­கும் நன்றி தெரி­வித்­துக்­கொள்­கி­றேன். கடந்த 3ஆம் தேதி­யில் இருந்து இங்கு யாருக்­கும் கொரோனா பாதிப்பு ஏற்­ப­ட­வில்லை," என்று தெரி­வித்­துள்­ளார்.