கொவிட்-19 விரைவு பரிசோதனைக் கருவிகள் இந்தியாவிலேயே தயாரிப்பு

1 mins read
d31f5f9d-350d-48fd-88fa-9214fbf001dd
லக்னோவில் வீடு இன்றி தவிக்கும் வெளிமாநில ஊழியர்கள், இதுபோன்ற பெரும் குழாய்களில் தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். படம்: ராய்ட்டர்ஸ் / பவன் குமார; -

புது­டெல்லி: கொவிட்-19 கிரு­மித்­தொற்று விரை­வுப் பரி­சோ­த­னைக் கரு­வி­களை இந்­தி­யா­வி­லேயே ஒரு தென்­கொ­ரிய நிறு­வ­னம் தயாரித்து வருகிறது.

'எஸ்டி பயோ­சென்­சர் ஹெல்த்­கேர் பிரை­வேட் லிமி­டெட்' என்ற அந்த நிறு­வ­னத்­தின் ஆலை ஹரி­யானா மாநி­லம், மனே­ச­ரில் அமைந்­துள்­ளது. வாரத்­திற்கு 500,000 விரை­வுப் பரி­சோ­த­னைக் கரு­வி­களை அந்த ஆலை தயா­ரிக்­கும்.

கடந்த 19ஆம் தேதி தயா­ரிப்­புப் பணி­க­ளைத் தொடங்­கிய அந்த நி­று­வ­னம் 25,000 பரி­சோ­த­னைக் கரு­வி­களை ஹரி­யானா மாநி­லத்­திற்கு வழங்­கி­யி­ருக்­கிறது.

தென்­கொ­ரி­யா­விற்­கான இந்­தி­யத் தூதர் ஸ்ரீபி­ரியா ரங்­க­நா­தன் நேற்று முன்­தி­னம் வடக்கு சுங்­சி­யாங்­கில் உள்ள அந்­நி­று­வ­னத்­தின் ஆலைக்கு நேரில் சென்று பார்­வை­யிட்டு, விரை­வுப் பரி­சோ­த­னைக் கரு­வி­கள் தயா­ரிப்­பிற்­கான ஏற்­பா­டு­க­ளைச் செய்­த­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

தேவை அதி­க­மாக இருப்­ப­தால் வரும் வாரங்­களில் இன்­னும் அதி­க­ள­வில் பரி­சோ­த­னைக் கரு­வி­கள் தயா­ரிக்­கப்­படும் என்று டுவிட்­டர் வாயி­லா­க இந்­தி­யத் தூத­ர­கம் தெரி­வித்­துள்­ளது.

முன்­ன­தாக, சீனா­வில் இருந்து இறக்­கு­மதி செய்­யப்­பட்ட விரை­வுப் பரி­சோ­த­னைக் கரு­வி­க­ளைக் கொண்டு நடத்­தப்­பட்ட சோத­னை­களின் முடி­வு­கள் 5.4% மட்­டுமே துல்­லி­ய­மாக உள்­ள­தா­கப் புகார்­கள் வந்­தன. இதை­ய­டுத்து, இரு நாட்­களுக்கு அந்­தக் கரு­வி­க­ளைக் கொண்டு சோத­னை­களை மேற்­கொள்ள வேண்­டாம் என்று இந்திய மருத்­துவ ஆய்­வுக் கழ­கம் அனைத்து மாநி­லங்­க­ளை­யும் கேட்­டுக்­கொண்­டது.