இந்தியா: கொரோனா பாதிப்பு ஏறுமுகம்

இந்தியா: கொரோனா பாதிப்பு ஏறுமுகம்

2 mins read
62e7b661-056e-48b0-a10e-b30407f0282a
மும்பையில் வீடு வீடாகச் சென்று மக்களைச் சென்று கொரோனா தொற்றுக்கான சுகாதாரப் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர் சுகாதாரத்துறை ஊழியர்கள். படம்: ராய்ட்டர்ஸ் -

புது­டெல்லி: இந்­தி­யா­வில் கொரோனா கிரு­மித்­தொற்று பல நாடு­க­ளை­விட குறை­வா­கவே இருக்­கிறது என்­றா­லும் பாதிக்­கப்­ப­டு­வோர் எண்­ணிக்கையும் பொருளியல் பாதிப்பும் தொடர்ந்து கூடு­கிறது.

இந்­தி­யா­வில் இது­வ­ரை­யில் 681 பேர் பலி­யா­கி­விட்­ட­னர். 4,258 பேர் குணமடைந்­து வீடு திரும்பி இருக்­கி­றார்­கள். 16,454 பேருக்­குத் சிகிச்சை அளிக்­கப்பட்டு வரு­கிறது. மொத்­தம் 21,393 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக நேற்று சுகா­தார, குடும்­ப­நல அமைச்சு தெரி­வித்­தது.

இந்­நி­லை­யில், ஏப்­ரல் 23 ஆம் தேதி நில­வ­ரப்­படி, 485,172 மக்­க­ளி­டம் இருந்து மொத்­தம் 500,542 ரத்த மாதி­ரி­கள் சோதிக்­கப்­பட்டு இருப்­ப­தாக இந்­திய மருத்­துவ ஆய்வு மன்­றம் குறிப்பிட்டது.

மகா­ராஷ்­டிரா மாநி­லத்­தில்­தான் பாதிப்பு அதி­க­மாக உள்­ளது. அங்கு 5,652 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்­பட்டு உள்­ளது. 269 பேர் பலி­யா­னதாக அதி­கா­ரி­கள் கூறி­னர்.

அந்த மாநி­லத்­தின் தலை­ந­கர் மும்­பை­யில் தமி­ழர்­கள் அதி­கம் வாழும் தாராவி பகு­தி­யில் மேலும் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு உறு­தி­யாகி உள்­ளது.

தாராவி பகு­தி­யில் மொத்­தம் 189 பேர் பாதிக்­கப்­பட்டு உள்­ள­னர். புது­டெல்லி, ராஜஸ்­தான், மத்­தி­யப் பிர­தே­சம் ஆகிய மாநி­லங்­களில் பாதிப்பு அதி­கம் இருப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இத­னி­டையே, கொரோனா கிரு­மித்­தொற்று கார­ண­மாக இந்­தி­யா­வில் ஊர­டங்கு நடப்­புக்கு வந்­த­தால் 12 கோடி வேலை­கள் பறி­போய்­விட்­ட­தா­க­வும் ஒவ்­வொரு குடும்­பத்­துக்­கும் 7,500 ரூபாய் அரசு உதவி வழங்க வேண்­டும் என்­றும் காங்­கி­ரஸ் கட்சி கோரி­யது.

காங்கிரஸ் பிர­மு­கர்­க­ளி­டம் காணொளி மூலம் கூட்­டம் நடத்­திய அந்­தக் கட்­சி­யின் இடைக்­கால தலைவி சோனியா, கொரோனா கிரு­மித்­தொற்றை ஒடுக்­கு­வ­தில் பரி­சோ­தனை மிக முக்­கி­யம் என்­பதை திரும்­பத்­தி­ரும்ப வலி­யு­றுத்தி னாலும் மத்­திய அரசு அதற்­குச் செவி­சாய்ப்­ப­தா­கத் தெரி­ய­வில்லை என்று தெரி­வித்­தார்.

மேலும் ஊர­டங்கை நீட்­டித்­தால் பொரு­ளி­யல் பாதிப்பு தாங்க முடி­யாத அள­வுக்­குப்­ ப­டு­மோ­ச­மா­கப் போய்­வி­டும் என்று அவர் கடுமை யாக எச்­ச­ரித்­தார்.

இவ்­வே­ளை­யில், இந்­தி­யப் பொரு­ளி­யல் 2021 மார்ச் வரைப்­பட்ட நிதி­யாண்­டில் 0.8%தான் வள­ரும் என்று உல­கப் பொரு­ளி­யல் கணிப்பு அறிக்­கை­யில் ஃபிட்ச் ரேட்­டிங்ஸ் (Fitch Ratings) என்ற அமைப்பு தெரி­வித்­துள்­ளது.

இவை எல்­லாம் ஒரு­பு­றம் இருக்க, கிரு­மித்­தொற்று கார­ண­மாக இந்­தி­யா­வில் ஊர­டங்கு விதிக்­கப்­பட்­ட­தால் அங்கு புலம்­பெயர்ந்த தொழி­லா­ளி­கள் நான்கு கோடி பேர் பாதிக்­கப்­பட்டு உள்­ள­னர் என உலக வங்கி கூறியது.

இந்­தி­யா­வுக்கு உள்­ளேயே தொழி­லா­ளர்­கள் இடம்­பெ­யர்ந்­துள்ள அளவு, உலக அள­வு­க­ளை­விட இரண்­டரை மடங்கு அதி­க­ம் என்­பதை அறிக்­கை­யில் வங்கி சுட்டியது.