மும்பை: மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் தெருவில் நடந்து சென்றபோது இருமியதால் கொரோனா கிருமி தொற்றி இருக்குமோ என்ற ஐயத்தில் அவ்வழியே வந்த சிலரால் அடித்துக் கொல்லப்பட்டார். கணேஷ் குப்தா என்ற ஆடவர் அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்காகக் கடந்த புதன் கிழமை தமது வீட்டைவிட்டு வெளியில் வந்தார். தமது தெருவில் போலிசார் சிலர் இருப்பதைக் கண்டதும் அவர் வேறு வழியில் சென்றார். அப்போது அவர் இருமியதால் அந்த வழியே வந்த வேறு சிலர் அவரைத் தாக்கினர். இதனால் திரு கணேஷ் ஓரத்தில் இருந்த சாக்கடையில் விழுந்து, இறந்து விட்டார். ஆயினும், அவர் தற்செயலாக இறந்துவிட்டதாக போலிஸ் பதிவுசெய்துள்ளது.
மும்பை: இருமியவரைக் கொன்ற கொடூரச் சம்பவம்
1 mins read

