மகாராஷ்டிரா: 7 ஆயிரம் பேர் பாதிப்பு

மகாராஷ்டிரா: 7 ஆயிரம் பேர் பாதிப்பு

2 mins read
4a5eda82-a600-42b5-a940-0ba84456a168
மும்பையில் தொழிலாளர்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து குளிக்கும் காட்சி. படம்: ஏஎஃப்பி -

மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதையடுத்து கிருமித் தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை அம்மாநில அரசு தீவிரப்படுத்தி உள்ளது.

இம்மாநிலத்தில் 310 பேர் உயிரிழந்துள்ளனர். கிருமித் தொற்றில் இருந்து 957 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர்.

இதற்கிடையே, ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் கொரோனா கிருமி பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 220ஆக அதிகரித்துள்ளது.

இக்குடிசைப் பகுதியைச் சேர்ந்த 14 பேர் கிருமித் தொற்றுக்கு பலியாகி உள்ளனர்.

இந்நிலையில் கிருமித் தொற்றில் இருந்து மகாராஷ்டிர மாநில வீட்டு வசதி துறை அமைச்சர் ஜிதேந்திர அவாத் மீண்டுள்ளார்.

அவருக்கு சில தினங்களுக்கு முன்பு கிருமித் தொற்று இருப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து அவர் தன் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

கடந்த 13ஆம் தேதி முதல் தனிமையில் இருந்த அவருக்கு, மீண்டும் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவருக்கு கிருமித்தொற்று ஏதும் இல்லை எனத் தெரிய வந்துள்ளது.

இதற்கிடையே எதிர்வரும் மே 15ஆம் தேதிக்குள் மும்பையில் மட்டும் கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6.5 லட்சமாக அதிகரிக்கக் கூடும் என மத்திய குழு கணித்துள்ளதாக வெளியான தகவல் மும்பைவாசிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் இந்த தகவல் வெறும் வதந்தி என மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மத்­திய குழு மாந­க­ராட்­சி­யின் நட­வ­டிக்­கை­க­ளைப் பாராட்டி உள்­ளது என்­றும், கொரோனா கிரு­மித் தொற்­றுப் பர­வ­லைத் தடுக்க மாந­க­ராட்சி எடுத்த நட­வ­டிக்­கை­களில் மத்­திய அரசு திருப்தி அடைந்து உள்­ளது என்­றும் மும்பை மாந­க­ராட்சி வெளி­யிட்­டுள்ள செய்­திக்­கு­றிப்­பில் கூறப்­பட்­டுள்­ளது.

இந்­திய நில­வ­ரம்

நாடு முழு­வ­தும் கொரோனா கிரு­மித் தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை 25,775ஆக அதி­க­ரித்­துள்­ளது.

இது­வரை 775 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­னர். தற்­போது 18,668 பேர் மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்.

குஜ­ராத்­தில் 2,600 பேர், டெல்­லி­யில் 2,300, ராஜஸ்­தா­னில் 2 ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்­ட­வர்­கள், உத்­த­ரப் பிர­தே­சத்­தில் 1,621 பேர், ஆந்­தி­ர­வில் 955 பேர் கிரு­மித் தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

இது­வரை இல்­லாத அள­வில் வெள்­ளிக்­கி­ழமை ஒரே நாளில் 1,752 பேருக்கு கொரோனா நோய்த்­தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ள­தா­க­வும் சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

இந்­நி­லை­யில் கொரோனா கிரு­மித் தொற்­றுக்கு சிகிச்சை பெற்ற 5 ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்­டோர் முழு­மை­யாக குண­ம­டைந்து இருப்­ப­தா­க­வும் சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கை ஒன்­றில் குறிப்பிடப்பட்டுள்­ளது.