தொற்றுப் பரவல் விகிதம் 8 விழுக்காடாகக் குறைந்தது

1 mins read
b78e3266-3482-46ab-93a2-51268e393e0e
ஊர­டங்கு உத்­த­ரவு அமல்­ப­டுத்­தப்­பட்­டதை அடுத்து நாடு முழு­வ­தும் கொரோனா கிரு­மித் தொற்றுப் பர­வல் விகி­தம் வெகு­வாகக் குறைந்­துள்­ள­தாக தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன. படம்: ஏஎப்பி/ பிரகா‌ஷ் சிங் -

புது­டெல்லி: ஊர­டங்கு உத்­த­ரவு அமல்­ப­டுத்­தப்­பட்­டதை அடுத்து நாடு முழு­வ­தும் கொரோனா கிரு­மித் தொற்றுப் பர­வல் விகி­தம் வெகு­வாகக் குறைந்­துள்­ள­தாக தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன. ஊர­டங்­குக்கு முன்பு நாள்­தோ­றும் புதி­தாக கிரு­மித் தொற்­றி­யோர் எண்­ணிக்கை சுமார் 500ஆக இருந்­தது. அச்­ச­ம­யம் கிரு­மித் தொற்று அதி­க­ரிப்பு விகி­தம் 21.6ஆக இருந்த நிலை­யில், தற்­போது அது 8.1 விழுக்­கா­டாக குறைந்­துள்­ளது.

எனி­னும் சில நாடு­களை ஒப்­பி­டும்­போது நோய் அதி­க­ரிப்பு விகி­தம் இந்­தி­யா­வில் சற்று அதி­க­மா­கவே காணப்­ப­டு­வ­தாக நிபு­ணர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

"ஜெர்­ம­னி­யில் ஊர­டங்கு அமல்­ப­டுத்­தப்­பட்­ட­தற்கு பிறகு அதி­க­ரிப்பு விகி­தம் 2 விழுக்­கா­டா­க­வும், அமெ­ரிக்­கா­வில் அதி­க­ரிப்பு விகி­தம் 4.8 விழுக்­கா­டா­க­வும் உள்­ளன.

"எனவே தற்­போ­துள்ள புள்ளி விவ­ரங்­க­ளின்­படி கணக்­கி­டும் போது அடுத்த ஒரு வாரத்­துக்­குள் நாட்­டில் கொவிட்-19 நோயா­ளி­க­ளின் எண்­ணிக்கை 40 ஆயி­ரத்தை எட்­டிப் பிடித்­தி­ருக்­கும்," என்று நிபு­ணர்­கள் சுட்­டிக்­காட்­டு­வ­தாக தமி­ழக ஊட­கம் செய்தி வெளி­யிட்­டுள்­ளது. இதே நிலை நீடித்­தால் அடுத்த இரு வார காலத்­திற்­குள் பாதிக்­கப்­ப­டு­வோர் எண்­ணிக்கை 70 ஆயி­ர­மா­க­வும் மே மாதம் இறு­திக்­குள் 2.5 லட்­சம் பேரா­க­வும் அதி­க­ரிக்க வாய்ப்­புள்­ள­தா­க­வும் நிபு­ணர்­கள் கூறி­ய­தாக அந்த செய்­தி­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இந்­நி­லை­யில் மே 3ஆம் தேதி­யு­டன் ஊர­டங்கு உத்­த­ரவு முடி­வுக்கு வருமா என்­பதை அறிய மக்­கள் ஆவ­லாக உள்­ள­னர்.