இந்தியாவில் கிருமித்தொற்று பரவல் விகிதம் 6 விழுக்காடாகக் குறைந்தது

இந்தியாவில் கிருமித்தொற்று பரவல் விகிதம் 6 விழுக்காடாகக் குறைந்தது

1 mins read
3b2d9cd4-eb08-4c74-a18c-4523af53c3b6
இன்று (ஏப்ரல் 26) 'மன் கி பாத்' வானொலி நிகழ்ச்சி வழி நாட்டு மக்களிடம் உரையாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கிருமித்தொற்றுக்கு எதிராகப் போராடும் கதாநாயகர்களுக்கு நாடு தலைவணங்குவதாகக் குறிப்பிட்டார். இந்தியாவில் கொரோனா கிருமிக்கு எதிரான போரை மக்கள் நடத்துவதாகக் குறிப்பிட்ட அவர், இந்தப் போராட்டத்தில் மக்களும் அரசும் இணைந்து செயல்படுவதாகத் தெரிவித்தார். மும்பையின் தாராவியில் மருத்துவர்கள் பரிசோதனைகள் மேற்கொண்டபோது எடுத்த படம்: ஏஎஃப்பி -

நாடு முழுவதும் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 28,000ஐக் கடந்துள்ளது.

இதற்கிடையே இந்தியாவில் கொரோனா கிருமித்தொற்று பரவல் வேகம் குறைந்துள்ளது.

கிருமித் தொற்றுப் பரவலின் அன்றாட பரவல் விகிதம் தற்போது 6 விழுக்காடாகக் குறைந்துள்ளது.

டெல்லியில் நேற்று (ஏப்ரல் 25) நடைபெற்ற மத்திய அமைச்சர்கள் குழுவின் 13ஆவது கூட்டத்துக்குப் பிறகு இத்தகவல் வெளியானது.

கொரோனா கிருமித் தொற்றால் ஏற்படும் உயிரிழப்பு விகிதம் 3.1 விழுக்காடாக உள்ளது என்றும் குணமடைவோர் விகிதாச்சாரம் 20 விழுக்காட்டுக்கும் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 100ஐ கடந்த பிறகு முதன்முறையாக நேற்றுதான் நோய்த் தொற்று பரவல் விகிதம் மிகக் குறைவான அளவில் 6% ஆக பதிவானது.

குறிப்புச் சொற்கள்