பிரதமர்: மக்கள் போர் வீரர்கள் போல் செயல்படுகின்றனர்

பிரதமர்: மக்கள் போர் வீரர்கள் போல் செயல்படுகின்றனர்

2 mins read
e2fa5687-4bc0-45f5-bb3a-e2caad0f73b9
கொரோனா கிரு­மித் தொற்றை எதிர்த்­துப் போரி­டும் வீரர்­க­ளு­டன் தொடர்பு ஏற்­ப­டுத்­திக் கொண்டு அனை­வ­ரும் தேசத்­திற்­கா­கப் பாடு­பட வேண்­டும் என பிர­த­மர் மோடி வலி­யு­றுத்தி உள்­ளார். படம்: ராய்ட்டர்ஸ் -

புது­டெல்லி: கொரோனா கிரு­மித் தொற்றை எதிர்த்­துப் போரி­டும் வீரர்­க­ளு­டன் தொடர்பு ஏற்­ப­டுத்­திக் கொண்டு அனை­வ­ரும் தேசத்­திற்­கா­கப் பாடு­பட வேண்­டும் என பிர­த­மர் மோடி வலி­யு­றுத்தி உள்­ளார்.

நேற்று வானொலி நிகழ்ச்சி வழி நாட்டு மக்­க­ளி­டம் உரை­யாற்­றிய அவர், கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ரா­கப் போரா­டும் கதா­நா­ய­கர்­க­ளுக்கு நாடு தலை­வணங்­கு­வ­தா­கக் குறிப்­பிட்­டார்.

இந்­தி­யா­வில் கொரோனா கிருமிக்கு எதி­ரான போரை மக்­கள் நடத்­து­வ­தா­கக் குறிப்­பிட்ட அவர், இந்­தப் போராட்­டத்­தில் மக்­களும் அர­சும் இணைந்து செயல்­ப­டு­வ­தா­கத் தெரி­வித்­தார்.

தற்­போது நடை­பெ­றும் போரில் குடி­மக்­கள் அனை­வ­ரும் போர் வீரர்­கள் போல் செயல்­ப­டு­வ­தாக வர்­ணித்­தார் பிர­த­மர் மோடி.

"இந்­தப் போராட்­டத்­தில் ஏழை­க­ளுக்­கு சிலர் உணவு வழங்­கு­கின்­ற­னர். சிலர் நிலங்­களை விற்று உத­வு­கின்­ற­னர். மேலும் ஒரு­சி­லர் தங்­கள் ஓய்­வூ­தி­யத்தை அளித்­துள்­ள­னர்.

"யாரும் பசி­யு­டன் இருக்­கக்­கூடாது என்­பதை நமது விவ­சா­யி­கள் உறு­திப்­ப­டுத்தி உள்­ள­னர்," என்று பிர­த­மர் மோடி தெரி­வித்­தார்.

இக்­கட்­டான வேளை­யில் ஒவ்­வொ­ரு­வ­ரும் தங்­க­ளால் இயன்ற உத­வி­யைச் செய்து வரு­வ­தாக குறிப்­பிட்ட அவர், நாடு தற்­போது சரி­யான பாதை­யில் செல்­கிறது என்­றார்.

மருத்­து­வர்­கள் மீது தாக்­கு­தல் நடத்­து­வது கண்­டிக்­கத்­தக்­கது என்­றும் இவ்­வாறு தாக்­கு­ப­வர்­கள் மீது கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்­றும் பிர­த­மர் மோடி குறிப்­பிட்­டார். இதற்­காக அவ­சர சட்­டம் கொண்டு வரப்­பட்­டுள்­ளது என்று அவர் சுட்­டிக் காட்­டி­னார்.

"கொரோ­னா­வுக்கு எதி­ரா­கப் போரா­டும் நாய­கர்­க­ளுக்கு நாடு தலை­வ­ணங்­கு­கிறது. சுகா­தா­ரப் பணி­யா­ளர்­க­ளின் பணி போற்று­த­லுக்கு உரி­யது. தூய்­மைப் பணி­யா­ளர்­க­ளின் சேவை­யை தற்­போது அனை­வ­ரும் உணர்­கின்­ற­னர்.

"காவல்துறையினர் உதவி செய்வதை நாம் பார்க்கிறோம். அவர்களின் பணியும் பாராட்டுக்குரியது. கொரோனாவுக்கு எதிரான போரில் உலக நாடுகளுக்கு இந்தியா உதவியுள்ளது," என்றார் பிரதமர் மோடி.

கொரோனா கிருமித் தொற்றிலிருந்து தப்பிக்க முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று குறிப்பிட்ட பிரதமர், சாலைகளில் எச்சில் துப்புவதைப் பாவச் செயல் என மக்கள் நினைக்கத் தொடங்கி விட்டதாகத் தெரிவித்தார்.

இதுபோன்ற தீய பழக்கங்களைக் கைவிட வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.