கிருமித்தொற்று: பிரிக்கப்பட்ட குழந்தை; காணொளியில் கொஞ்சி மகிழும் தாய்

கிருமித்தொற்று: பிரிக்கப்பட்ட குழந்தை; காணொளியில் கொஞ்சி மகிழும் தாய்

1 mins read

மும்பை: கொரோனா கிரு­மித் தொற்­றால் பாதிக்­கப்­பட்ட பெண் காணொளி வசதி மூலம் தன் குழந்­தை­யைக் கொஞ்­ச­ வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது.

அவு­ரங்­கா­பாத்­தைச் சேர்ந்த அந்தப் பெண் நிறை­மாத கர்ப்­பி­ணி­யாக இருந்த நிலை­யில் கொரோனா கிரு­மித் தொற்று ஏற்­பட்­டது.

இதை­ய­டுத்து மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்ட அவ­ருக்கு ஏப்­ரல் 18ஆம் தேதி குழந்தை பிறந்­தது. பின்­னர் நடத்­தப்­பட்ட பரி­சோ­த­னை­யில் குழந்­தைக்கு கிரு­மித்­தொற்று இல்லை என்­பது உறு­தி­யா­னது.

இத­னால் தாயி­டம் இருந்து குழந்தை பிரிக்­கப்­பட்­டது. அப்பெண்ணுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்­நி­லை­யில் அப்­பெண் குழந்­தை­யைப் பார்க்க முடி­யா­மல் தவித்­துள்­ளார். அவ­ரது தவிப்­பைக் கண்டு நெகிழ்ந்­து­போன மருத்­து­வ­மனை ஊழி­யர்­கள் காணொளி வசதி மூலம் குழந்­தை­யைப் பார்க்க ஏற்­பாடு செய்­த­னர்.

இதன் மூலம் முதன்­மு­றை­யாக தாம் பெற்­றெ­டுத்த குழந்­தையை கண்டு பர­வ­சம் அடைந்­தார் அந்­தப் பெண். இதை­ய­டுத்து அவர் அவ்­வப்­போது காணொளி மூலம் குழந்­தை­யைக் கொஞ்சி மகிழ்­கி­றார்.