புதுடெல்லி: முதல் முறையாக நேற்று மதியம் வரையிலான 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 1,990 பேர் கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 49 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. "நாட்டில் ஒட்டுமொத்தமாக 26,496 பேர் கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 5,804 பேர் குணமடைந்துள்ளனர்.
இதனால் தற்போது சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணி்க்கை 19,868ஆக இருக்கிறது. இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 824ஆக அதிகரித்துள்ளது. மிக அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றான மகாராஷ்டிராவில் கொவிட்-19 நோய்க்கு இதுவரை 323 பேர் பலியாகி உள்ளனர். குஜராத்தில் 133, மத்தியப் பிரதேசத்தில் 99, டெல்லியில் 54, ராஜஸ்தானில் 33, தெலுங்கானாவில் 26, உத்தரப் பிரதேசத்தில் 27, மேற்குவங்கம், கர்நாடகாவில் தலா 18, பஞ்சாப்பில் 17 பேர் பலியாகி உள்ளனர்.

