லக்னோ: டெல்லியில் நடைபெற்ற தப்லிக் மாநாட்டில் பங்கேற்றவர்கள் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு 11 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என உத்தரப்பிரதேச பாஜக எம்பி ரவீந்திர குஷ்வாகா அறிவித்துள்ளார். இவ்வாறு தகவல் அளிப்பவர்களின் விவரம் ரகசியமாக வைக்கப்படும் என அவர் கூறியுள்ளார். இந்த அறிவிப்புடன் கூடிய சுவரொட்டிகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் கிருமித் தொற்று பரவக்கூடாது என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில்தான் இவ்வாறு பரிசு வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தப்லிக் மாநாட்டில் பங்கேற்றவர்கள் தாமாக முன்வந்து மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தகவல் கொடுத்தால் ரொக்கப்பரிசு: உத்தரப்பிரதேச பாஜக எம்பி அறிவிப்பு
1 mins read

