பெங்களூரு: கேரளா, டெல்லி ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து கர்நாடகாவிலும் கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்படுகிறது. இச்சிகிச்சையை அளிப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக கர்நாடகா அமைச்சர் சுதாகர் தெரிவித்தார். இத்தகைய சிகிச்சைக்கு கொரோனா கிருமித் தொற்றில் இருந்து மீண்டவர்கள் தங்களுடைய பிளாஸ்மாவை தானமாக வழங்க வேண்டி இருக்கும். கர்நாடகாவில் ஏராளமானோர் இதற்கு முன்வந்திருப்பதாக அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவிலும் பிளாஸ்மா சிகிச்சை
1 mins read

