விமானச் சேவைத் துறையில் ரூ.84 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படக்கூடும்

விமானச் சேவைத் துறையில் ரூ.84 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படக்கூடும்

1 mins read

புதுடெல்லி: கொரோனா கிருமித் தொற்று உலக நாடுகளுக்குப் பெரிய அளவில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இந்திய விமானச் சேவை துறைக்கு 84 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என அனைத்துலக விமானப் போக்குவரத்து சங்கம் மதிப்பீடு செய்துள்ளது. அனைத்துலக விமானச் சேவை நிறுவனங்களின் ஒட்டுமொத்த இழப்பு 23.55 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கு அதிகளவில் அந்நியச் செலாவணி வருவாய் ஈட்டித்தரும் துறைகளில் சுற்றுலாத் துறையும் ஒன்று. இத்துறைக்கு ஏற்பட்ட பாதிப்பால் விமானச் சேவைத் துறைக்கும் சிக்கல் எழுந்துள்ளது.