புனேயில் தயாராகிறது கொரோனா தடுப்பூசி

புனேயில் தயாராகிறது கொரோனா தடுப்பூசி

1 mins read
1c23196f-72ca-42e1-843f-8a9612d9770e
கொல்கத்தா அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று பீடிப்பால் மரணமடைந்தவர்களின் உடலைக் கொண்டு செல்லக் காத்திருக்கும் சுகாதாரத்துறை ஊழியர்கள். படம்: ஏஎப்பி/டிபியங்சு சர்கர் -

மும்பை: கொரோனா கிரு­மித் தொற்றை தடுப்­ப­தற்­கான தடுப்­பூ­சியை தயா­ரிக்­கும் முயற்­சி­யில், ஆக்ஸ்­போர்டு பல்­க­லைக்­க­ழ­க­மும் மகா­ராஷ்­டி­ரா­வில் உள்ள 'செரம் இன்ஸ்­டி­டி­யூட் ஆப் இந்­தியா' என்ற நிறு­வ­ன­மும் இணைந்து செயல்­பட்டு வரு­கின்­றன.

தற்­போ­தைய நிலை­யில், பரி­சோ­த­னை­கள் வெற்­றி­க­ர­மாக அமைந்­தால் அடுத்த மூன்று வாரங்­க­ளுக்­குள் தடுப்­பூசி தயா­ரிக்­கும் பணி­கள் துவங்­கப்­படும் என்று அந்­நி­று­வ­னத்­தின் தலைமை செயல் அதி­காரி ஆதிர் பூனே­வாலா தெரி­வித்­துள்­ளார்.

அனைத்­து­லக அள­வில் இந்த மருந்தை தயா­ரிக்க ஏழு மிகப் பெரிய நிறு­வ­னங்­களும் இந்த திட்­டத்­தில் இணைந்­துள்­ள­தாக அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

"எதிர்­வ­ரும் அக்­டோ­ப­ரில் இந்த தடுப்­பூ­சி­கள் விற்­ப­னைக்கு வரும். முதல் கட்­ட­மாக, முதல் ஆறு மாதங்­களில், மாதத்­துக்கு 50 லட்­சம் தடுப்­பூ­சி­களும் அதன்­பி­றகு மாதத்­துக்கு ஒரு கோடி தடுப்­பூ­சி­களும் தயா­ரிக்க முடிவு செய்­துள்­ளோம்.

"இந்த மருந்­துக்கு நாங்­கள் காப்­பு­ரிமை கோர மாட்­டோம். அனைத்து நாடு­க­ளுக்­கும் மருந்து கிடைக்­கும் வகை­யில் சில நிறு­வ­னங்­க­ளு­டன் ஒப்­பந்­தம் செய்­வோம். இந்­தி­யா­வில், புனே­யில் உள்ள எங்­க­ளு­டைய ஆலை­யி­லேயே இந்த மருந்தை தயா­ரிப்­போம்," என்று ஆதிர் பூனே­வாலா மேலும் தெரி­வித்­துள்­ளார்.

கொரோனா தடுப்­பூ­சிக்­கு ­என தனி ஆலை அமைக்­கப்­படும் என்றும், அடுத்த மூன்று ஆண்­டு­க­ளுக்­குள் இது சாத்­தி­ய­மா­கும் என்­றும் அவர் கூறி­யுள்­ளார்.

தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டுள்ளன. இதுவரை அந்த முயற்சியில் வெற்றி கிடைக்கவில்லை.