ஆந்திர ஆளுநருக்கு கொவிட் 19 பரிசோதனை

ஆந்திர ஆளுநருக்கு கொவிட் 19 பரிசோதனை

1 mins read

அம­ரா­வதி: ஆந்­திர மாநில ஆளு­நர் பிஸ்­வ­பூ­ஜன் ஹரி­சந்­த­னுக்கு மிக விரை­வில் கொரோனா கிரு­மித் தொற்­றுக்­கான சோதனை செய்­யப்­பட உள்­ளது.

ஆளு­நர் மாளி­கை­யின் ஊழி­யர்­கள் 4 பேருக்கு கொரோனா கிரு­மித் தொற்று இருப்­பது உறுதி செய்­யப்­பட்­டதை அடுத்து இந்­ந­ட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­ப­டு­கிறது.

ஆளு­நர் மாளி­கை­யின் முதன்­மைப் பாது­காப்பு அதி­காரி, தாதி­யர் ஒரு­வர், சமை­யல் கலை­ஞர் மற்­றும் வீட்­டுப் பணி­யா­ளர் ஆகிய நால்­வரே கொவிட் 19 நோயால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

இதை­ய­டுத்து பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் மூன்று பேர் மருத்­து­வ­மனை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­னர்.

இவர்­கள் நான்கு பேரும் வெளி­நாடு எதற்­கும் பய­ணம் மேற்­கொள்­ள­வில்லை. ஏற்­கெ­னவே கிரு­மித் தொற்று இருப்­ப­வர்­க­ளு­டன் நேர­டித் தொடர்­பும் கொண்­டி­ருக்­க­வில்லை. எனவே, இவர்­க­ளுக்கு எப்­படி நோய்த்­தொற்று ஏற்­பட்­டது என்­பது குறித்து குழப்­பம் நில­வு­கிறது.

முதன்­மைப் பாது­காப்பு அதி­காரி மட்­டும் சில வாரங்­க­ளுக்கு முன்பு ஹைத­ரா­பாத் சென்று வந்­துள்­ளார் என்று ஆளு­நர் மாளிகை வட்­டா­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.

இந்­தப் பய­ணத்­தின்­போது அவ­ருக்கு நோய்த்­தொற்று ஏற்­பட்­டி­ருக்­க­லாம் எனக் கரு­தப்­ப­டு­கிறது. தற்­போது அவ­ரும் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்டு உரிய சிகிச்சை பெற்று வரு­கி­றார்.