தமிழகத்தில் ஒரே நாளில் 121 பேருக்கு கொவிட்-19; சென்னையில் மட்டும் 103

1 mins read
5d546691-1a51-4b3d-86f4-0cdfe6761f8e
இந்தியாவில் ஊரடங்கு காரணமாக வெளியில் எங்கும் செல்லாமல் வசிப்பிடத்திலேயே தங்க வேண்டிய நிலை சென்னைவாசிகளுக்கும் உள்ளது.படம்: ஏஎஃப்பி -

தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 28) ஒரே நாளில் 121 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 103 பேர் சென்னையை சேர்ந்தவர்கள்.

இதன் அடிப்படையில் தமிழகத்தில் மொத்தம் 2,058 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 673 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

கொரோனா பாதிப்பால் இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் மொத்த உயிரிழப்பு 25ஆக அதிகரித்திருக்கிறது.

தற்போது 902 பேர் கிருமித்தொற்று பாதிப்பால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் தினசரி எண்ணிக்கை 50க்கும் குறைவாக இருந்தது. இதனால் கொரோனா படிப்படியாக கட்டுக்குள் வந்துவிடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருந்த நிலையில், இன்று பாதிப்பு 121 ஆக அதிகரித்திருப்பது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இன்று மாலை நிலவரப்படி இந்தியாவில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 29,974 ஆக உயர்ந்திருக்கிறது; அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 8,590 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது.

குறிப்புச் சொற்கள்